சொர்க்கம் கண்டவன்…
வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு…