இது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு
அவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற
முயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள்
சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சரியாக 10.15 க்கு கல்லூரி வாசலை அடைந்ததும் அங்கே வரவேற்றது இசக்கிமுத்து, ஜான், வைரவன், சுப்பையா, ராம்குமார் மற்றும் சில தோழிகள்.
ஜானுடன் நமக்கு நன்கு பரிச்சயமான பிரகாஷ் வந்திருந்தான்.
எங்கள் அண்ணன் வீர சிங்கம் சிவராம் அவர்களும் அவருடன் அலிஸ்டர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். மேலும் ஜெயதீபன், கண்ணன், விஜயகுமார், சுரேஷ், ஆல்வின் , ராம்குமார் ஆகியோரும் இன்னும் பலரும் வந்திருந்தனர்.
ஒரு வருடமே நம் கல்லூரியில் படிந்து பின் பொறியியல் படிக்க சென்ற அமுதா, அவளது தோழி ராஜி மற்றும் எங்களுக்கு பரிச்சயம் இல்லாத தற்போது முடித்தவர்கள் சிலரும் வருகை தந்திருந்தார்கள்.
சின்ன தங்கம், ராணி ராம்பாலா , பிரவீன் குமரன், ஜெய சந்திரன், மெய்கண்டன், அசோக் லிங்கம் இன்னும் சிலர் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அடுத்தவருடம் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுகொள்கிறேன்.
கல்லூரி வாசலை கிடந்து உள்ளே சென்றதும் எங்களை வரவேற்றார் கணிபொறி தலைமை ஆசிரியர் கருப்பசாமி அவர்கள்.
அவரை தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியர் சித்திரைகுமார் , தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன், மற்றும் வணிகவியல் ஆசிரியர் வைட்டன்( Whittan ) ஆகியோரை சந்தித்தோம்.
இவர்களை தொடர்ந்து ஆசிரியை ஜெஸ்மின், சுகுணா, ப்ரியா மற்றும் தீபா ஆகியோர்களை சந்தித்த பின் ,
எங்கள் சிங்கம், தங்க தலைவர், ஆசிரியர் மகேஷ்குமார் அவர்களை சந்தித்தோம்.
சற்று நேரத்தில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆனது. ( பெருசா ஒன்னும் இல்லீங்கோ). ஒரு பந்தை ஒன் பிச்ல போட்டு கொஞ்ச தூரத்துல நட்டி வைச்சிருகுற ஒற்றை ஸ்டெம்ப்ல அடிக்கணும். ஒருத்தருக்கு மூணு சான்ஸ். இந்த வீர விளையாட்டை விளையாடி முதல் பரிசை தட்டி சென்றவர் : இசக்கி முத்து அவர்கள்.
இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : “ நான் இதுக்காக தனியா ஏதும் ப்ராக்டிஸ் பண்ணல. பட் நொவ் என்னால இத நம்பவே முடியல“
இவர் இப்படி கூறவும் அருகில் இருந்து அண்ணன் அசோக் கூறியது, “ எங்களாலயும் தான் நம்ப முடியல“
அடுத்ததாக போட்டியில் இரண்டாவது பரிசை தட்டிசென்றவர் சுப்பையா கணேஷ். அவரிடம் இது பற்றி கேட்டபோது :: “ நான் போலீசில் சேர்வதற்காக பல பயிற்சி செய்து வந்தேன். இப்போது போலீசில் சேரும் எண்ணத்தை கைவிட்டு விட்டாலும் நான் செய்த அபாரமான பயிற்சிகள் எனக்கு இந்த போட்டியில் ஜெயிக்க உதவி செய்தது.” என்றார்.
இவர் பேட்டியை கேட்டதும் அருகில் இருந்த யாரோ “ அப்படியே அறுவடை பண்ணிட்டாலும், ஆணியே புடுங்கவேணாம், முதல்ல கூட்டத்த கலைங்கப்பா ” என்ற சப்தம் இவர் காதில் விழவில்லை. அப்படி சொன்னது அனேகமா இவராதான் இருக்கும்னு சி.பி.ஐ சந்தேக படுறாங்க.
சரி அத விடுங்க,
பின்பு கொஞ்ச நேரம் கல்லூரியில் நாங்கள் படித்த அறைகளின் வாசத்தை சுவாசிக்க சென்றோம். ஒவ்வொரு வகுப்பும் இன்னும் தனக்கே உரித்தான அதே வாசத்தோடு இருந்தது.
அதன்பின் பழைய மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.
கல்லூரி முதல்வர் நாகராஜ் , ஆசிரியர் மகேஷ்குமார் , கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.
ஆசிரியை ஜாஸ்மின் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்.
அதை தொடர்ந்து முதல்வர் நாகராஜ் அவர்கள்பேசினார்.
பின்பு ஆசிரியர் கருப்பசாமி பேசினார். அதை தொடர்ந்து மகேஷ்குமார் அவர்கள் தன் உரையை நிகழ்த்தினார். அவர் கூட்டத்தில் இருந்து யாராவது பேச வாருங்களேன் என்றார். நம்ம ஆளுங்க தான் சும்மாவே இருக்க மாட்டாங்களே, என்னை பேச சொல்ல நான் சென்றேன். ( கொய்யால, எதுக்குடா நீ போன? அப்படின்னு மத்தவங்க கேக்குற அளவுக்கு உளறி கொட்டி காமெடி பண்ணினேன் )
நம்ம ஜெயதீபன் பேசினான். உண்மையை பேசினான். தோப்பில் தேங்காய் திருடியது முதல் உள்ள அனைத்தையும் என்னை விட நன்றாகவே உளறி கொட்டினான். அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “ பட் , உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு” என்று சொல்லும் வரை பேசினான்.
ஆனா பாசக்கார பய… நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்றதும் எனக்கு போன் செய்து “அண்ணே, நாம எல்லா வருசமும் இப்படி மீட் பண்ணலாம்” என்றான்.
நம் தோழி செல்வப்ரியா பேசினாள். ஆங்கில முன்னேற்றம், கல்லூரி வளாக நேர்காணல் பற்றி பேசினாள்.
பின்பு ஆசிரியர் மகேஷ்குமார் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் சில கவிதைகள், மேற்கோள்கள் என கலக்கினார். பேசும் போது தாருண்யம் சென்ற நிகழ்வுகளை தன்னால் மறக்க முடியாது என்றார். ஆம், எங்களாலும் மறக்க முடியாத இனிமை பொங்கும் பயணம் அது.
இவ்வாறாக பழைய மாணவர்கள் சந்திப்பு ஒரு காப்பி, ஒரு ஜாங்கிரி, ஒரு பப்ஸ், இரு பிஸ்கட்டுடனும் ராம்குமாரின்
நிறைவுறையுடனும் இனிதே நிறைவடைந்தது…
மேலும் புகைப்படங்களுக்கு mr.boobalaarunkumaran@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரையும் தொடர்பு தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்தவும். நட்புக்குள் என்றும் பிரிவே இல்லை. நண்பேன்டா …
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் உவரி சென்று கொண்டாடிய நிகழ்வை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
என்றும் தீராத நட்புடன்,
பூபால அருண் குமரன் . ரா
Leave a Reply