ராஜுவும் அவன் நண்பர்களும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது முதன் முதலாக ஆபாச படம் பார்க்க திட்டம் போட்டார்கள். அவர்களில் ஒருவன் ராஜுவிடம் நாங்கள் படம் பார்க்க போகிறோம், நீயும் வரியா என்று கேட்கிறான்.ஏன் என்றால் ராஜு வகுப்பில் முதலிடம். அவன் வருவானா என்ற சந்தேகம்..

ராஜு கொஞ்சம் யோசிக்கிறான். வீட்டில் தெரிந்தால்? அந்த படங்கள் பார்பவர்கள் கெட்டவர்கள், நான் ? வகுப்பில் முதலிடம் இருக்கும் நான் ? அப்பா அரிவாளோடு ? என்று பல எண்ணங்கள் வந்து போக “வரவில்லை” என்று கூறிவிடுகிறான்.

ஆனாலும் அவன் மனதில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களுடன் படம் பார்க்க செல்ல வேண்டும் என்றால் பணம் வேண்டும், ராஜுவிடம் பணம் இல்லை.

பணத்திற்காக தான் ராஜு வரவில்லை என்பதை அறிந்த இன்னொரு நண்பன் “நீ பணமெல்லாம் தர வேண்டான்டா” என்று அவனுக்காக பரிந்துரைகிறான்.அவன் சம்மதிக்கிறான். அன்று இரவு வீட்டுக்கு வந்து தன் நாட்குறிப்பில் படம் பார்க்க பரிதுரைத்த நண்பனை பற்றியும் வரும் ஞாயிற்றுகிழமை படம் பார்க்கலாம் என் முடிவாகி இருப்பதையும் எழுதியபடி தூங்கி விடுகிறான்.

ஞாயிற்றுகிழமை  வருகிறது. ஆளிலாத நண்பனின் வீடு, டிவிடி , பிளேயர் என அனைத்தும் தயாராகிறது. அனைவரும் ஒன்று சேர ஆர்வத்துடன் படம் இனிதே ஆரம்பமாகிறது. முதலில் “மும்பை” என்ற எழுத்துடன் மும்பை வர அனைவரும் இன்னும் ஆர்வமுடம் பார்க்க நம்ம அஜித்குமார் வருகிறார். “என்னடா இவர் எப்பட இந்த படம் நடிச்சாரு?” என்று ஒரு குரல் வந்து ஓய்வதற்குள் படத்தின் பெயர் ” ஜனா ” என்று வருகிறது. “சாரி டா டிவிடி மாறி போச்சு” என்று டிவிடி மாற்றப்பட்டு மீண்டும்,

இனிதே ஆம்பமாகிறது. ஒரு பெண் தன் ஆடைகளை கழற்றி காமிராவின் முன்னால் தனக்கு கொடுக்கப் பட்ட வேலையை சரியாக செய்தாள்.
ராஜு திடீரென்று அங்கிருந்து வெளியேறினான். காரணம் கேட்ட நண்பர்களிடம் எதுவும் சொல்லவில்லை. நண்பர்களுக்கு வேறு வேலை இருப்பதால் அவனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.

ராஜு அன்றிரவு தன் நாட்குறிப்பில் எழுதினான்,

ஒரு பெண் தன்(மானத்தை)  கழற்றி எறித்துவிட்டு உள்ளுக்குள் குமுறலையும் வெளியே கதறலையும் காட்ட காமிரா படம் எடுத்துக் கொண்டிருந்தது.
நண்பர்கள் அவளின் வயிற்றுக்கு கிழேயும் மேலேயும் பார்க்க, எனக்கு அவள் வயிறு தான் கண்ணில் பட்டது. ஆகவே எழுந்து வந்துவிட்டேன்.

 –__–__–__–__–__–__–__–__–__–

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட…

என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை
வண்டி வண்டியாய்…!!!

கவிதைகளில் மட்டுமே  எனக்கு காதல் வசப்படுகிறது…..!
 

–__–__–__–__–__–__–__–__–__–   

கதை என் நண்பனுடையது. அவன் வார்த்தைகளை எழுத்தாகி விட்டேன் சில மாற்றங்களுடன்.

காதல் தோல்வி கவிதைகள் இதயத்தி(ல்)லிருந்து எழுதியது என் இன்னொரு நண்பன்.

என்றும் அன்புடன் நான், உங்கள் நண்பன்