விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .

அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலல் திட்டினான் .

விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட  பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..

சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் தான் எறிந்திருப்பான்  என  உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன்  உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .

வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க  ” அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது” என ஆங்கிலத்தில் கூறினார் .

–__–__–__–__–__–__–__–__–__–
ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?”.
அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”.

“சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான்.
இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?” என்றான்.
அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்?”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா?.
 –__–__–__–__–__–__–__–__–__–

இரு கதைகள் அனைவரும் அறிந்ததே என்றாலும் நான் படித்தது
இங்கேயும் , இங்கேயும் தான்.

என்றும் அன்புடன் நான், உங்கள் நண்பன்