கவிதையில் பல வகைகள் உண்டு. அதில் புது வகைதான் இது.
வேற ஒன்னும் இல்லங்க. மாணவர்மலர் என்பது பல கல்லூரிகளில் மாணவர்களின் திறமையை புத்தகமாக பதிப்பித்து பத்திரப் படுத்துவது.
அதுபோல எங்கள் கல்லூரி மாணவர் மலருக்காக, வகுப்பில் உள்ள அனைவரின் பெயரையும் வைத்து நட்பை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை தான் இது…


அகிலத்தை  சுகிக்
அன்னையை  வணங்கு !

லட்சுமிதேவியின்  ஈஸ்வரத்தில்
தங்கமான  கார்த்திகை  ஒளியாய்
ஆனந்தம்   பொங்கும்
பிரியாத  செல்வமாய்
ராஜாங்கத்தின்  ராணிபோல
வாழ்வின்  இனிதான  சாந்தியை  பெற
தோழமையே ,
                               நீயெனக்கு  தோழனாயிரு…

கலைகளின்  செல்வியும், வித்யாவின்  விஜயமும்,
மீனாய்  சீறிப்பாய்ந்து  நிதமும்  நித்திமாய்
கலாமின்  கனவைப்போல பாரினில் கவியாய்
பவனி  வரும் ,
                               சகியே  உன் துணையிருந்தால் !

அசோகச்  சக்கரத்தின்
ஆரத்தில் நட்பு !

பாலன்  குமரனின்
ராம்ராஜ்யமும்  நட்பு !

முத்தும்  வைரமும் சேர்ந்த
மணிமகுடத்திலும்  நட்பு !

கணேசனின்  தும்பிக்கையும் நட்பு !
நாளையின்  நம்பிக்கையும்  நட்பு !

பிரளயத்தின்
புரிதலும் நட்பு !

சுற்றித்திரியும்
ஜீவன்களுக்கு
தாகம்  தீர்க்கும் நீரும் , நட்பு !

லீவிலும் நட்பு ; கனாவிலும் நட்பு !

பிம்பங்களில்
ரேகைதேடும்
மானிடர்களிலும் நட்பு !

பிறப்பிலும் நட்பு ;
பாவத்திலும் நட்பு;
திக்கேங்கும் நட்பு !

கோதையின்  காதலிலும்  நட்பு ;
ல்வியின் சாரத்திலும் நட்பு ;
அடடா , உலகெங்கும் நட்பு !

நட்பிலே ,
பேதமையுமில்லை !
பின்னடைவுமில்லை !

ஜெயத்தின் பாதையில்
சுகுனங்கள் தர , மல்லிகையின் மணம் வீச
எங்கெங்கோ  பூத்து  ஒன்றாய்  கூடிய  மலர்மாலை ;
ஒன்றிரண்டு  உதிர்ந்தாலும்
உலகெங்கும்  மணம்  வீசும் ,

TEN DRAGONS & FIRE BIRDS...

இந்த கவிதை மட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு சிறுகதைகளும் எழுதி கொடுத்தேன்.. அந்த நேரத்தில் கல்லூரியின் முதல்வர் மாறிவிட்டதால் மாணவர் மலருக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். கேட்டால் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள் ( அவ்வளவு மதிப்பு மிக்க கல்லூரி)…இருந்தாலும் அத்தனை நட்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய கல்லூரியை மறக்க முடியுமா .. யாராலும் முடியாது.

நன்றிகளுடன் உங்கள் நண்பன்…