நான் எப்ப ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)
அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
( குறிப்பு : வெங்காயம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )
இவர் தான் அசோக சக்கரத்தில் இருக்கும் அசோக் என்ற சிங்கம்.
தொலைதூரக் கல்வியில் MBBS கிடையாது என்ற ஒரே காரணத்துக்காக MCA’வை திருச்செந்தூர்ல ஆதித்தனார் கல்லூரியில் படிக்கிறார்.
இவருடைய வரலாற்றைத் தான் ‘எந்திரன்’ என்று திரைப்படமாக எடுக்கிறார்கள். இவருடைய கதாப்பாத்திரத்தை தான் ரஜினி நடிக்கிறார்.
இவர் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ஊமர் , தெரசா , அடியா, மொக்கைய போடாத, சொன்னு …( அர்த்தமெல்லாம் கேட்க கூடாது )
என்னுடைய நல்ல நண்பன். பாசக்காரனும் கூட…
அடுத்து ரவி பாலன். பூச்சிக்காட்டு வேங்கை என்பதை எலி என்று மாற்றிக் கொண்டவர்.
என்ன பன்றார்னுதெரியலையா…? புல்லோட தன்மையை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.
ஆராய்ந்து முடித்து விட்டார். இப்போது ஆராய்ச்சி கூடத்துக்கு போன் செய்து சில மருந்துகளை வர செய்து புல்லின் மீது தெளிக்கிறார்.
காய்ந்த புல்லை பசுமையாக்கி ஓய்வு எடுக்கிறார். அவர் ஓய்வு எடுக்கட்டும். நாம புறப்படலாம்….
1 Comment
[…] RSS ← பில்லா 007 ( நாடகம் )… பயணமும் நண்பர்களும்… → […]