சாதியின் பரிணாமம்!!
மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர். தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது.
ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள்.
Potter குயவர்
Hunter வேட்டையாடி
Mason கட்டட பணியாளர்
Fisher/Fischer/Fischer மீனவர்
Smith கொல்லர்
Sangster பாடகர்
Master ஆசான்
Jardine(garden)தோட்ட கலைஞர்
Taylor தையலர்
Shepherd மேய்ப்பர்
இப்படி இன்னும் ஏராளம்.
சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும். கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர்.
Wang (king) அரசர்
Lau (han dynasty) அன் அரசாட்சி
Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்
Thong (tang dynasty ) தாங் அரசாட்சி
Fu (teacher ) ஆசிரியர்
இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறைசாற்றுகிறார்கள்.
சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது.
அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது.
ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.
கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.
வரலாற்று ஆய்வாலர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.
பின் எப்படி சாதி இழிவானது??
அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.
மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது. ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர்.
சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.
புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர். கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர்.
இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.
தீர்வு தான் என்ன??
அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள்.
சாதி தேவை தானா??
சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.
ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர். கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.
தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது.
சாதிய இழிவு அறியாமை!!
ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.
இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.
ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..
மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது!!
நிறைவாக என் அய்யன் பாரதியின் வரிகளோடு,
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
மேலும் தெளிவுற : இங்கே