தற்போது டோரன்ட் மூலம் திரைப்படங்கள், மென்பொருட்கள் ஆகியவை தரவிறக்கம் செய்வது வழக்கமாகி விட்டது.
இருந்தாலும் சிலர் ரொம்ப மெதுவாக டவுன்லோட் ஆகுது, படம் ஓட மாட்டேங்குது, Windows Media Player ஓபன் ஆகுது என புலம்புவதுண்டு (என்னை போல).
அதற்கான காரணம் என்னவென்றால் ,
நாம் உபயோகிக்கும் டோரென்ட் மென்பொருள்தான்.
µTorrent , Halite, BitSpirit, Vuze, BitTorrent.
இவைகளின் வேலை எங்கெங்கெல்லாம் நாம் தரவிறக்கம் செய்யும் தரவு இருக்கிறதோ அதையெல்லாம் இணைத்து நம்முடைய கணினிக்கு அவர்களிடம் இருந்து கொண்டு வருவது தான்.
இதில் என்ன பிரச்சனை என்றால்,
நாம் தரவிறக்கும் தரவு நிச்சயம் பொதுவுடைமையானது இல்லை என்பதே.
ஆம். நாம் தரவிறக்கம் செய்வதையோ , தரவிறக்கிய (புதிய திரைபடங்கள், திரைப்பாடல்கள், மென்பொருட்கள்) தரவு உங்கள் கணினியில் அல்லது கையில் இருந்தாலோ அது சட்டப்படி குற்றம்.
இதுல ஒரு காமெடி என்னன்னா சென்னை பாரிஸ் கார்னர் பக்கத்துல ஒரு சிடி கடைல நான் புளுரேவை பொறுக்கிகொண்டு இருக்கும்போது ஒரு சுமோவில் ஆஜானுபாகுவான இரு ஆணும் ஒரு பெண்ணும் (மப்டி போலீஸ்) வந்து புதுபட சிடி இருக்கான்னு தேடுறாங்க., அந்த வரிசைல இருக்குற பல கடைகள்ல நான் நின்ற கடையையும் சேர்த்து மூன்று கடைகளை பார்த்துவிட்டு ஒன்னும் கிடைக்காம போய்டாங்க.
அவிங்க வர்றதுக்கு கால்மணி நேரத்துக்கு முன்னால ரெய்டு வர போறதா தகவல் வந்து எல்லா சிடியையும் கடை பெட்டிக்கு கிழே மறைத்து வைத்தனர். ரெய்டு நடக்கும் போது என் கையில் சில ஆங்கில படங்கள் இருந்தது. வந்தவர் புதுபடம் ஏதுமில்லை என்று திரும்பியதும் கடைக்காரரிடம் நான் கேட்டேன், இந்த ஆங்கிலபடங்களை விற்க தடைஇல்லையா என.
இதெல்லாம் அளவ்டு தான் தம்பி , புதுபடம் தான் நாட் அளவ்டு என்றார். அப்படியே யார் பிடிபட்டாலும் வரிசையா இருக்குற கடைகள்ல யார் கடைசியா ஃபைன் கட்டினாங்களோ அவங்களுக்கு அடுத்த கடைகாரர் தான் தற்போது ஃபைன் கட்டுவார். # என்னாவொரு நாணயம்
இதுல இருந்து சொல்ல வர்றது என்னன்னா, அனுமதி இல்லாமல் விற்கப்படும் அனைத்துமே தண்டனைகுரியது தான். நான் அன்று கையில் வைத்திருந்த ஆங்கில படங்களும், நாம் நம் கணினியிலும் மொபைலிலும் கேட்கும் திரைபாடல்களும் இதில் அடக்கம். ஆனால் நம்மை அடக்க யாராலும் முடியாது என்பதே இந்த பதிவின் சாராம்சம்.
————————- NON TECH AREA END ————————–