Category Love Letters

Whispers of romance, longing, and emotion wrapped in words — from first crush to forever feels. / முதல் காதல் நினைவுகளிலிருந்து நெஞ்சோடு எழுதப்பட்ட காதல் வார்த்தைகள் வரை, அனைத்தும் வார்த்தை பதிவுகளாய் இங்கே.

பிரியாணி

உன் விரல் தொட்டு வேக சென்றதால் கோழிகள் சொர்க்கம் சென்றது அதன் ருசியில் மெய் மறந்து நான் மோட்சம் கொண்டேன் (இன்னொரு பிளேட் கொடு தங்கம்)

Read Moreபிரியாணி

உதயமான நாள்

இனிமை பொங்கபசுமை வளர்த்துதன்மை உயரதாயகம் உயர்த்தும்பெண்ணியமே எண்ணங்களை திண்ணமாக நிறைவேற்றி,வண்ணங்களை வாழ்வுகளுக்குபகிர்ந்தளிக்கும்பெண்ணினமே, எழில் தரும் சூரியனேதளிர் விடும் பொன் மலரேதடாகத்தின் தாமரையேபூவுலகில் பூமகளே உனக்குஉதயமான நல்வாழ்த்துக்கள்

Read Moreஉதயமான நாள்

கண்ணீர்

பிரிவின் துயரில் உன் கண்ணீர் துடைந்தெறியும் தூரத்தில் என் விரல்கள் விடியல் பூத்ததும் விரைந்து வரும் கலங்காதே, என் கண்ணே 

Read Moreகண்ணீர்

நேரம்

உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும் அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய். அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை !

Read Moreநேரம்

அறியாமை

சில நேரம் உன் சினுங்கள்களை ரசித்தபடி நிற்பதற்கு கடிந்து கொள்வாய் நீ கடிந்து கொள்வதை ரசிக்கவே நான் உன் சினுங்கள்களை ருசிக்கிறேன் என்பதையறியாமல்

Read Moreஅறியாமை

அன்பு

உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய் நான் புரியாமல் விழித்தேன் இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால் நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்

Read Moreஅன்பு