வணக்கம்,
என் பள்ளிப் பயணங்களில் நான் கண்ட, கேட்ட, பார்த்த, பழகிய சிலபல விஷயங்களையும்
நெஞ்சுக்குள் பூக்கும் கல்லூரி நினைவுகளோடு நான் கொண்ட அனுபவங்களையும் சுமந்து கொண்டு
“எப்படியும் வாழலாம்” (breakthesillyrules.blogger) என்ற தளம் Blogger’ல் உதயமானது.
கடந்து வந்த பாதைகளையும் மிதித்த முட்களையும் முகர்ந்த மலர்களின் மணத்தையும் எழுத்துக்களால் பதிப்பித்து கொண்டது.
நாட்கள் நகர, Blogger தளத்தில் இருந்து WordPress(breakthesillyrules.wordpress) தளத்துக்கு இடம் பெயர்ந்து எழுத்துக்களை தொடர்ந்தது அத்’தளம்’.
எதையும் யாராலும் முழுமையாக அறிவது அரியது. அதைப்போலவே நான் பார்த்த விசயங்களையும் அனுபவித்த கசாயங்களையும் உங்களுக்கு முழுமையாக தர முடியாது என்றாலும் அதன் உணர்வுகளை உங்களுக்குள் கொண்டு செல்ல முனைகிறேன்.
அதற்காக இங்கு சுயசரிதம் இருக்கும் என்று தவறாக எண்ண வேண்டாம். இது என்னால் சுயமாக எழுதப்படுவது தானே தவிர சரிதம் இல்லை என்பதையும்,
ஒருசில சரிதம் இருந்தாலும் அதற்காக யாரும் வருத்தப்பட போவதில்லை என்ற நம்பிக்கையிலும் WordPressக்கு ஓய்வு கொடுத்து, Ever Be Happy உருவானது.
பள்ளி தோழர்களின் நினைவுகளையும், கல்லூரி நண்பர்களின் மலர்ச்சியையும், என் என் தினகுறிப்புகளின் பல பக்கங்களையும், என் மனையாளிக்கு நானளித்த சில கவிதுகள்களையும், இந்த உலகத்தில் எப்படியும் வாழலாம் என்ற உணர்வுகளையும் கலந்து ஒன்றிணைத்து எழுதப்பட்டது தான் இந்த தளம்.
இந்த தளத்தில் உள்ள எழுத்துக்களின் வீரியம் யாரோ ஒருவரின் மனதில் ஒரு புரிதலை அல்லது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.
எங்கோ ஒரு சப்தம் கேட்டபோது சில பறவைகள் தன் சிறகுகளுக்கு அசப்தம் கொடுத்து புறப்படுகிறது. அதுபோல நான் இங்கு சிதறவிட்ட, விடப்போகிற வார்த்தைகள் கூட சில மனதில் நிசப்தத்தை ஏற்படுத்தலாம். அப்படி ஏதேனும் ஏற்பட்டால் மன்னிப்பு எனும் ஒரு வார்த்தையில் உங்கள் மனம் குளிரும் என்றால் இதோ “என்னை மன்னிக்கவும்”.
உங்கள் மனதில் சீக்கிரம் கரையகூடிய விஞ்ஞானமாற்றங்கள் நிகழாது என்றால் என்னை திட்டி தீர்த்துவிடுங்கள். ஆனால் காரணம் கூறி திட்டுங்கள். அது நமக்குள் நிச்சயம் வெள்ளை சிறகுகளோடு ஒரு புறா உதயமாக வழி வகுக்கும்…
பெற்ற அன்னையையும்; ஏந்திக் கொண்ட தேசமும்; என் உயிரினும் மேல்.
என்றும் நட்புக்கு தலை வணங்கும் உங்கள் நண்பன்.
பூபால அருண் குமரன் . ரா
