காதல் கொண்டது போல
அவளை கண்டு சிரித்தான்
சிரிப்பை கண்டுகொள்ளாதபடியான
அவள் பார்வை, சற்றே அரும்பிய
மீசையை முறைத்தது, உண்மையில் வெறுத்தது
வந்தமர்ந்தவன் தயங்கியபடி
முதல் முறை என்றான்
உன் விழியிலேயே அது தெரிகிறது
உன் பெயரென்ன
கணநேர சிந்தனையில் அவனுக்கு அவனே
பெயரிட்டான் ஊரிட்டான் வேலையும் கொண்டான்
வருவோரிடம் சொல்லும் வழக்கமான
திரைகதையை சொன்னாள் அவள்
வீரமாக தாசிவீடு வந்தவன்
வந்ததை மறந்து தயங்கினான்
ஆயிரம் தயக்கத்தை கண்டவள்
அமைதிக்குள் செல்ல அழைப்பு விடுத்தாள்
அடிபணிந்தவனாய் அனைத்தும் செய்தான்
தத்துவம் பேசி “வழக்கம் போல்” ஒருவனானான்
சமாளிக்கும் திறமை இன்றியா
இதனை வருடம் பணம் பார்த்தாள்
பணம் கொடுத்து வாங்கிய நிமிடங்கள் முடிந்தது
விடை கொடுக்கும் தருணத்தில்,
அடுத்த ஆடவனுக்கான நேரம் ஆரம்பமானது
ஆனால் அவளுக்கான நேரம் முடிந்தது
குரல்வளை இரத்தம்
ஆடையில்லா அவனது உடலிலும்
இரக்கமில்லா அவனது கத்தியிலும்
உடலை உயிர் பிரியும் தருவாயை
உணர கூட முடியாதவளாய்
கண்களை மூடிகொண்டாள்
கறையை உடலில் இருந்தும்
தன்னை அகப்படலில் இருந்து அப்புறபடுத்தினான்
எத்தனையோ பேர்களை எப்படி எப்படியோ பார்த்தவள்
அத்தனையும் மாயை என பறைசாற்றி படுத்திருந்தாள்
வீடு வந்தவன், தன் சுயகுறிப்பு நாளேட்டை
சுய பிரகடனம் செய்தபடி
அவள் சென்ற இடம் தேடி காற்றாடியில் இவனும் சென்றான்
…
…
…
உடலை விற்க சென்றவள் உயிருடன் இல்லை என்பதை கூட அறியாமல்
தோழிகளுடன் சுற்றி திரிந்துவிட்டு மாலை வீடு சேர்ந்தாள்
வழக்கமாய் தாமதமாகும் அம்மாவுக்காக காத்திராமல்
தானே தன் வீட்டுபாடங்களை முடிக்க தன் பையை புரட்டினாள்
ஒரு புத்தகம் தன்னை அவசரபடுத்திக்கொண்டு கீழே விழுந்தது
“இனியாள்” “4’ம் வகுப்பு” “ஆ” – பிரிவு, சமூக அறிவியல்.
…
…
அவனது உடலை தாங்கிய காற்றடிக்கு விடுதலை கொடுத்தனர் சிலர்
அருகே இருந்த நாட்குறிப்பு,
யாரோ ஒருவளின் வாழ்நாள் குறிப்பென பறைசாற்றியது
அதன் கடைசி வரிகள்,
…
இனியாள் இனி நல்வாழ்வு வாழட்டும்
Leave a Reply