உடல் ஓய்ந்து விழி மூடும் தருணம் வரை
உழைத்தோம்
விலை ஏதும் இல்லாமல்
அடிமை ஆனோம்
விதியென நம்மை நாமே
நொந்துகொண்டோம்
கடமை இதுவென கவனிக்க
மறந்தோம்
கண்ணியம் கண்ணீரோடு கரைவதை
கண்டோம்
விடியல் ஒருநாள் வருமென
கனவிலும் காண மறந்தோம்
உதித்தது தழல், எழுந்தது சூரியன்
மழைத்துளி முத்துக்கள் ஆவதைபோல
சுதந்திர தாக வித்துக்கள் எங்கும் பரவியது
எடுக்கவும் முடியாமல்
கோர்க்கவும் முடியாமல்
வெள்ளை பட்டாளங்கள் வெறிகொண்டு ஓடியது
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்று பாரதி சுதந்தரகாற்றை
சுதந்திரத்துக்கு முன்னமே சுவாசித்துவிட்டான்
வீதியில் வீணே விடப்பட்டு
நாமே எடுத்துகொண்டதல்ல சுதந்திரம் ;
விதியோடு போராடி
வீர மரணமெய்து எடுத்துவந்ததே
நம் இந்திய சுதந்திரம் !!!
அன்னார் இன்னார் என கூறி
சிலரையோ பலரையோ விடுவதற்கில்லை
ரத்தம் சிந்தவும் உயிரை துறக்கவும்
துணிந்த ஓவ்வோரு இந்தியனும் வீரனே
போராட்ட கூட்டத்தில் கடைசியாய் நின்றாலும்
இறுதிவரை பாரததாய் மீது பற்று கொண்ட
ஓவ்வோரு இந்தியனும் வீரனே
பாரததாய் மீது பற்று கொண்ட ஓவ்வோரு இந்தியனும் வீரனே
– பூபால அருண் குமரன் . ரா
Leave a Reply