எனக்கான காலம் கனிந்துவர
நாளாகும் போல தெரிகிறது
இனியும் உதிர்ந்து விழும் என
காத்திருக்க மனமில்லை
குருவிவார் கொண்டு உதிர்த்தி விடுவதே
உத்தமம் என்கிறது மனம் !!!
கோடிகணக்கான நம்பிக்கை
உள்ளே உறங்குகிறது
லட்சகணக்கான லட்சியங்கள்
அமைதியாய் காத்திருக்கிறது
விடியவிடிய உழைப்பை
கொட்ட உடல் தயாராயிருக்கிறது
புதிதுபுதிதாய் சிந்திக்க
மூளை விழித்தேயிருக்கிறது
கனவுகள் அடுத்தடுத்தாய்
நிறைவேற அடுக்கடுக்காய்
இருக்கிறது
இறைவா,
சீக்கிரம் வா
வந்திங்கு அனைத்தையும்
அப்படியே அமைய கடவது
என்று சொல்லிவிட்டுப் போ !!!
தீராத நட்புடன்
பூபால அருண் குமரன்.ரா
Leave a Reply