::  நாள்  : 23-01-2012   ::   நேரம் : இரவு 3 மணி 25 நிமிடங்கள் ::

(என் நாட்குறிப்பில் இருந்து)

தமிழ்த்தாயே,

தனலெட்சுமியிடம்

நட்பு கொள்

உன்னை பேசுபவர்களுக்கும்

கொஞ்சம் கொடுக்கச் சொல்

இல்லை,

உன்னையும் மறந்து போவர்

உன்னையும் மறக்க சொல்வர்

 

சில கிழவர்கள்

உன் பெயரை கொண்டு

மாங்காய் பறிக்கிறார்கள்

 

அதற்கு கற்களாய்

உன் குழந்தைகளையே

கொடுக்கிறாயே !

 

மண்ணுக்குள் புழு நெளிவதுபோல

மண்டைக்குள் சிறுமூளை கொடு

சிந்திக்(கும்)க உன் தமிழை கொடு !

நீ வாழ்ந்து

வாழ வை !!!

 

தமிழை மறந்தான்

தான்

தமிழனென்று மறந்தான்

 

சீர்திருத்தம் என்றான்

தான்

சீரழிந்து நின்றான்

 

உயர்தனி செம்மொழி என்றால்

உலகை மறக்கிறான்

உயிரும் துறக்கிறான்

ஆங்கிலம் கற்றான்

தான்

ஆணவம் கொண்டான்

 

தன்னிலை மறந்து

தறிகெட்டு திரிகிறான்

 

விரிஏழு கடல் கடந்து

தமிழன் என்ற

போர்வையில்

தமிழை மறந்து

சிரிக்கிறான்

 

நாளுக்கு ஒருமுறை சுழலும்

உலகே வியக்கும் விண்மீனாய்

தமிழனிருக்க

தமிழினம் அழிவை நோக்கி

விழி வியந்திருக்கு !!!

 

அட தமிழனே,

கடைகடையாய் ஏறியிறங்கினாலும்

இதுபோல் ஒரு பொம்மை

கிடைதிடுமோ ?

உன் கையில் படாதபாடு படுகிறதே

என் தமிழ்மொழி !!!

 

கொடுங்கோல்

ஆட்சியில் கூட

தமிழை இப்படி கொலை செய்ததில்லை யாரும்

 

காணி நிலம் கேட்ட பாரதியையும்

நல்ல தமிழை கேட்க வைத்துவிடும்

இந்த நவயுக பாரதம் !!!

தீராத நட்புடன்

பூபால அருண் குமரன். ரா

This work is licensed under a Creative Commons license.