மாதராய் இவ்வுலகில் பிறந்திட

மாதவம் செய்திட வேண்டும்

பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.

 

பெண்ணுக்கு நிகர்

பெண்ணே அன்றி

இவ்வுலகில் எவருமிலர் !

Mother Love_1

என் தாயே,

மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய்

உனை அன்னையாய் பெற மாதவம் நான் செய்தேன்

 

கருவுற்ற காலம் முதல்

உருபெற்ற காலம் வரை

உன் வயிற்றில் எனை சுமந்தாய்

 

தரை தொட்ட காலம் முதல்

நடை கொண்ட காலம் வரை

உன் இடுப்பில் இடம் தந்தாய்

 

நான் பிறக்கும் முன்பே

என் மீது காதல் கொண்டவள் நீ !

நான் இறக்கும் வரை

அதை மறக்கவே மாட்டேன் !

Mother Love_2

தாயே,

பெண்ணை பெருமை என்று சொல்ல நீயே ஒரு சாட்சி !

 

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

 

பெண்ணின் கனிவு இன்றி

உலகுக்கு உருளகூட தெரியாது!

பெண்கள், உலகின் கண்கள் என்ற வர்ணிப்பு

வெறும் வார்த்தையில்லை

நியதி !

 

காலங்கள் கரைந்தோடினாலும்

பெண்ணின் பெருமை உலகில் பொறிக்கப்படும்

முத்து மகுடங்கள் !

Mother Love_4

தாய்மையின் பிறப்பிடமே பெண்தான்

தயவின் தாயகம் பெண்தான்

 

நீரின்றி அமையாது உலகு

ஆம்,

நீரின் நவரசங்களையும் கொண்டவள் பெண் மட்டும் தான்

நீரின்றி அமையாது உலகு !

 

பெண் தெய்வங்களை வழிபடும் நம் பண்பாடு

வெண் நிலவில் வரும் தேய்மானம் என

கண் இன்றி பல கயவர்கள் கத்தினாலும்

விண் உலகமே வியக்கும்படி

தன் முனைப்புடனே முன்னேறும்

பெண் இன்றி அமையாது உலகு !

 

ஆயிரம் சூரியனின் வெளிச்சம் கொண்டவள் பெண்.

 

பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிரும்

பெண்ணின் பெருமையை

உலகே வியக்கும்படி எடுத்துரைக்கும்

ஒரு எடுத்துகாட்டு தான்…

Mother Love_3

பெண் இன்றி அமையாது உலகு !

பெண் இன்றி அமையாது உலகு !

பெண் இன்றி அமையாது உலகு !

This work is licensed under a Creative Commons license.