பழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன்.
பழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது.
ஜான், நான்(பூபாலன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம்.
ஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.
ஜானும் நானும் நாசரேத் சென்று அங்கே ஜானின் அலுவலத்தில்(WI5 இணைய வழங்குனர்) கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு பின் திருச்செந்தூர் சென்றோம்.
நாங்கள் இருவரும் செல்லும் முன் அங்கே மற்றவர்கள் சென்று இருந்ததால் கிட்டதட்ட முப்பது முறைக்கும் மேலாக எங்கே இருக்கிறீங்கள் என்று கேட்டுகொண்டு இருந்தனர்.
பின்பு கொஞ்சநேர கடற்கரை உலாவுக்கு பின் டல்ஹௌசியும் வைரவனும் கடலின் அலைகளோடு மூழ்கி எழுந்தனர்.
அதற்குள் ஜான் “வீட்டுக்கு போகணும், அப்பா அடிப்பாங்க” என்று கெஞ்சினான். “சரி, பத்திரமா போய்ட்டு வா” என வழியனுப்பி வைத்தோம்.
அதன்பின் டல்ஹௌசி,வைரவன் முருகனை சந்தித்து வந்தனர். இருவரும் வரும்முன் நாங்கள் மூவரும் சில கடைகளுக்கும் புகுந்து வேட்டை ஆடினோம்.
ஐவரும் சந்திக்கும் போது மாலைமலர் செய்திதாள் படித்துகொண்டு இருந்தனர் அங்கு சிலர். தற்போது இரு பைக் மட்டுமே உள்ளது. ஆனால் ஐந்து பேர்…
இருந்தாலும் திசையன்விளை வந்து சேர்ந்துவிட்டோம். வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது நம்ம ஜான் ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கல. அதான் கல்லூரிவிழாவில் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு காட்சியில் பில்லா-வாக ஜான்…
வலப்பக்கம் பில்லாவை மிரட்டுபவர் போலீஸ் ஆபீசர் டக்டீஸ் (எ) டல்ஹௌசி பிரபு.
மதியநேரத்தில் கொம்மடிகோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரும்போது குலசை பாதையையும், மாலைநேரத்தில் உடன்குடி பாதையையும் உபயோகித்தால் காவலர்களுக்கு தண்டம் கட்ட தேவை இருக்காது.
(திருச்செந்தூர் பலமுறை சென்றிருந்தாலும் இந்தமுறை பெற்ற அனுபவம் இதுதான்)…
Leave a Reply