நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால்  நடந்தது விபரீத விளைவு.

இளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம்.

பயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம்.

அந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள் நாங்கள் “அப்படி என்னத்த தான் ஆடி கிழிக்கிறோம்”னு பார்க்க வந்தார்கள்.

எங்களுக்கு ஒரே  வெட்கம். அது மட்டுமில்லாம நாங்க ஆடுறது பாத்து எங்களோட நடன அசைவுகளை அவங்க சுட்டுஅவங்களோட ஆட்டத்துல சேத்துகிட்டாங்கன்னா ?? ( அப்படியே அறுவடை பண்ணிட்டாலும்)

அதான். நாங்க கொஞ்சம் உஷாரா கதவு மற்றும் ஜன்னல்களை மூடிட்டோம். (அந்த மொக்க கதவ மூடினாலும் ஒண்ணு தான் மூடாட்டியும் ஒண்ணுதான்) இருந்தாலும் அவங்க கதவை தள்ளிக் கொண்டு கதவை திறக்க முயற்சிக்க, நாங்க ஏதோ அறிவாளிதனம் என்று எண்ணி கதவை அறையின் உள்பக்கம் இருந்து இறுக்கமாக மூடமுயற்சி செய்தோம். அவர்களும் எங்களுக்கு இணையாக வெளியில் இருந்துஉள்ளே தள்ள முயற்சித்தனர்.

விளைவு, முதலாம் ஆண்டு BCA மாணவி அமுதாவின் கையில் உள்ள சதைபிடிப்பு கதவின் இடையில் மாட்டிக்கொண்டது.

மாணவிகள் அனைவரும் சப்தம் போட, ஏதும் அறியாத நாங்கள் உள்ளிருந்து மேலும் வேகமாக பூட்ட முயற்சித்தோம். சற்று நேரத்தில் நாங்கள் வலுவை குறைத்துகொண்டு வெளியே வந்தால் , அதிர்ச்சி..

அந்த பெண்ணின் கண்களில் மயக்கத்தையும், சுற்றி இருந்த அவள் தோழிகளின் கண்களில் தீயையும் பார்த்தேன்.

நாங்கள் செய்வது அறியாது திகைத்த போது விஷயம் மேலிடம் சென்றது. கல்லூரி முதல்வர் மகேஷ்குமார் வந்தார். அமுதாவுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு வீட்டிக்கு செல்ல உத்தரவு இடப்பட்டது.

கல்லூரிக்கே விஷயம் தெரிந்தது. என்னிடம் வந்து அனைவரும் என்ன செய்தாய் ? கொலை கேஸ் ? என மிரட்டினர்.

நடுவுல நம்ம நாட்டாமை வந்து,
எந்த பிரச்சனைக்கும் போகாதன்னா கேட்குரியா ?? தலை விதிடா என்று நொந்து கொண்டார்.

மூன்றாம் ஆண்டு பர்வின் அக்கா ” நீ தான் மெயின் குற்றவாளியாமே” என்று கலாய்க்க,

கணிணி துணைஆய்வாளர் ஜெயகலா ஆசிரியரும் நடந்ததை தெரிந்து விசாரணை நடத்தினார்கள்.

இப்படியாக  அன்றைய பொழுது நிறைவடைந்தது.

அடுத்த நாள் : கல்லூரியில் இளைஞர் கலைவிழா (12-10-2007)

அமுதா காயத்துக்கு மருந்திட்டு வந்திருந்தாள். பேசினேன். மன்னிப்பு கோரினேன். வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டேன்.

மீண்டும் அதிர்ச்சி என்னை தாக்கியது. (நீங்க ஒன்னும் அதிர்ச்சி ஆகாதீங்க ) அவள் வீட்டில் மற்றவர்களை சமாளித்து விட்டதாகவும், அவளுடைய பாட்டி மட்டும் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறினாள். ( என்ன வார்த்தைன்னு மட்டும் என்கிட்ட கேட்டுடாதீங்க )

அடிபட்ட உடன் அவளது தோழி ராஜி கோபமாக என்னை பார்த்து முறைத்தபடி சென்றாள். மறுநாள் சமாதனம் ஆகிவிட்டோம்.

இப்படியாக பல நிகழ்வுகளுக்கு பிறகு அந்த தோழிகள் ஆடிய பாடல் :: புதுபேட்டை படத்தில் இடம் பெறும் “வரியா வரியா”… ( குறிப்பு : மேலே படத்தில் உள்ள நடனம் கல்லூரி நாள் விழாற்கு ஆடியது. “வரியா” பாடல் அல்ல)…

இந்நாளின் நிகழ்வுகள் பற்றி என் நாளேட்டின் குறிப்புகளை காண :: இங்கே :: செல்லவும்.

இப்படிக்கு

என்றும் நட்புடன் உங்கள் நண்பன்