::  நாள்  : 22-02-2010 :: நேரம் : இரவு 1 மணி ::

செல்லிடைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

மறுபக்கத்தில் ஒரு தோழமை. தோழமையின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் தன்னை மெளனத்தின் பிடியிலிருந்து விடுவித்தபடி என் செவியறைகளுக்குள் அடைக்கலம் புகுந்தது.

சில கண்ணீர்த்துளிகள் வார்த்தைகளை சிறை பிடித்து மீண்டும் மெளனத்திற்கு அடிமையாக்கியது.

பல நோக்கத்தோடு வந்த அந்த அழைப்பு சில துளிகளால் பரிதவித்து பாதியிலேயே மரிந்துவிட்டது.

அழைப்பு, துண்டிப்பு ஆனபோது எனக்கு புரிந்துவிட்டது. வலிகளை விவரிக்க வழிகளே இல்லை என்று.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

கனவுகளை கலைத்துவிட்டு
கண்ணுக்கு மருந்திடும் சமுதாயம் ;

மருந்து கண்ணுக்கு இல்லை
தன்னை பார்க்காமலிருக்க
கண்ணுக்கு சமுதாயமிடும் சுத்த நாடகம்.

அந்த நாடகம் இருபுறமும் அரங்கேறி இருந்தாலும்
முடிவு ஓர் உன்னதமாய் இருக்க இல்லாத இறைவனை வேண்டுகிறேன்.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

இல்லாத இறைவா,

யாரையும் ,
மண்ணுக்கு கண்ணீர்துளிகளை தானம் செய்ய வைத்து
வழிநெடுக துன்பங்களை தூக்கவைத்து
உலகை வெறுக்க வைத்து விடாதே…

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

எங்களிடம்
காலம் மோதுகிறது
நிச்சயம் காலத்துக்கு கடிவாளம் இட்டு
எங்கள் வீட்டு குட்டிப் பாத்திரத்தில்
அடைத்து வைத்திருப்போம்.
அப்போது காலம் அழுது புலம்பி கேட்கும்
மரண சம்பவத்திற்கு மன்னிப்பை !

— என் டைரியில் இருந்து…

இப்படிக்கு

என்றும் தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்…