ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை.
ஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை.
கற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
இன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும் நம்மிடமும் பல விஷயங்கள் இருக்கிறது.
கல்லூரி ஆசிரியர்கள் நம் நினைவில் இருந்து மறைவது கடினம். ஆம், நம் ஆட்டம் பாட்டம் அறிந்த ஆசிரியர், கனவை பகிர்ந்து கொள்ள , நினைவை பங்கு கொள்ள, நம் நடிப்பை பார்த்து சிரிக்க, நாம் விடும் கதைகளை நம்பியதை கூறி நமக்கு திருப்தி கொடுத்த, நட்பின் பிரிவை இணைக்க என பலவிதமான ஆசிரியர்கள்…
ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான பாணியை கொண்டு கற்பித்தார்கள்.
இன்னும் கற்பிக்கிறார்கள்…
கல்லூரி என்றாலே நினைவில் வரும் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் மகேஷ்குமார், கருப்பசாமி, மகேஸ்வரி, ஜெயகலா, சுமதி, முத்து குமாரி, சுகுணா,அமுதா, ஜாஸ்மின், சித்திரைகுமார், ராஜா ராம், பாலகிருஷ்ணன், வைட்டன் ஆகியோர். இவர்கள் மற்றுமின்றி இன்னும் இருகிறார்கள். சிலர் வகுப்பு வந்து பாடம் எடுக்கவில்லை என்றாலும் மனதில் மறக்க முடியாத இடம் பிடித்தவர்கள்…
ஆசிரியர்கள் என்ற சொல்லுக்கு நண்பர்கள் என்ற பொருளை தந்த ஆசிரியர்
கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் இதயம் கனிந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…