நான் எப்ப ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)
அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
( குறிப்பு : வெங்காயம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )
இவர் தான் விக்னேஷ் குமரன் என்ற விக்கி,
திசையன்விளைல வளர்ந்து நிக்குற கட்டிடங்கள் எல்லாத்தையும் கட்டினது நான்தான்’னு வருங்காலத்துல சொல்ல இப்பவே பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு ஜீவன். இப்பக்கூட அது விசயமா தான் பைக்ல போறாரு.
“நீ போயிட்டு வா தல , அப்புறம் பாக்கலாம்”…
அடுத்தது என் ஆருயிர் நண்பன் கேசவன் (நாராயண கோவிந்தா கோ…விந்தா)
என்ன ஒருத்தரும் இல்லன்னு பாக்குறிங்க. கடைல வேலை இருக்கும் போது போஸ் குடுக்க முடியாதுல்ல… இப்ப வந்துடுவார் …
இதோ வந்துட்டார். சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. மறைக்குது…
தேங்க்ஸ் சார். பாருங்க புள்ளைய எம்புட்டு அழகா கணக்கு பாக்குதுன்னு.
இவர் மூணு ஈ முடிச்சிட்டு அப்பாவுக்கு துணையா கடைல கணக்கு எழுதுறார்.
மூணு ஈ”ன்ன ”EEE” ங்க.
இவரோட ஒரே ஆசை டைடானிக் கப்பலுக்கு கேப்டன் ஆகுறதுதான். ஜேக் பயலோட கிரகம் சரியில்லாம மொத்த கப்பலும் கடலுக்குள்ல போனத கேட்டுட்டு மனசொடிஞ்சி போயிட்டார். அதனால அந்த ஆசைய கை விட்டுட்டார். ஆனாலும் வேலை பார்த்தா, கப்பல்ல தான் வேலை பார்ப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறார்.
அடுத்து டல்ஹௌசி பிரபு..
இவங்க தாத்தா சுதந்திர போராட்ட தியாகி”னு இவன் சொல்லி தான் இவங்க தாத்தாவுக்கே தெரியும். அந்த அளவுக்கு நல்லவன்.
இவனோட சிரிப்புல மயங்காத பொண்ணுங்களே கிடையாது.( ஓ.. இது தான் அழகுல மயங்கி விழுறதா )
இவனுக்கு இருக்கும் பல வேலைகளுக்கு நடுவுல திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்து வழி அனுப்பி வச்சாங்க. உண்மையிலேயே பாசக்கார பய…
Extra Fittings :::
இது தான் எங்க ஊர்ல இருக்குற ஒரே ஒரு தியேட்டர்… கணேசன் டாங்கீஸ் , சாரி டாக்கீஸ்…