Category

College Life

November 12, 2010

தில்லுபரு ஜானே…

நட்புகளுக்கு வணக்கம்,

இரண்டாம் வருட கல்லூரி விழாவில் என் வகுப்பு தோழிகள் கலக்கிய ஒரு நடனம் தான் இந்த தில்லுபரு ஜானே……

இந்த நடனத்தில் நான் கொஞ்சம் கூடுதலாக ரசித்தது கடைசி 15 நிமிடங்கள் தான்.  இளையராஜா தன்னுடைய பெயரை இந்த பாடலிலும் பதித்திருப்பது அந்த நிமிடங்களில் யாராலும் உணர முடியும். மேலும் ,

கலியல் எனும் கலையையும் என் தோழிகள் அதில் முயற்சி செய்து இருப்பார்கள். அது வராமல் போனது இரண்டாவது மேட்டர்…


[vimeo http://www.vimeo.com/16743007 w=400&h=300]

நடன புயல்கள் :

பிரேமா
ராணி ராம் பாலா
விஜய கனகா

பார்கவி
முத்து லட்சுமி
நித்யா

என்ன பாக்குறீங்க , எல்லாமே நல்ல தமிழ் பெயர்கள் தாங்க…
ஏன் இதை சொல்றேன்னா இப்ப எங்கங்க இப்படி நல்ல பெயர்களை கேட்க முடியுது.
சரி அத விடுங்க , ஆட்டம் எப்படி …

புடிசிருந்தா இன்னொரு முறை பாருங்க , இல்லன்னா இன்னொருவருக்கு சொல்லி அவங்கள பாக்க வைங்க…

ஓகே வா , நெக்ஸ்ட் மீட் பண்றேன்…

October 5, 2010

நட்புகளின் பெயர்களே கவிதையாய் !

கவிதையில் பல வகைகள் உண்டு. அதில் புது வகைதான் இது.
வேற ஒன்னும் இல்லங்க. மாணவர்மலர் என்பது பல கல்லூரிகளில் மாணவர்களின் திறமையை புத்தகமாக பதிப்பித்து பத்திரப் படுத்துவது.
அதுபோல எங்கள் கல்லூரி மாணவர் மலருக்காக, வகுப்பில் உள்ள அனைவரின் பெயரையும் வைத்து நட்பை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை தான் இது…


அகிலத்தை  சுகிக்
அன்னையை  வணங்கு !

லட்சுமிதேவியின்  ஈஸ்வரத்தில்
தங்கமான  கார்த்திகை  ஒளியாய்
ஆனந்தம்   பொங்கும்
பிரியாத  செல்வமாய்
ராஜாங்கத்தின்  ராணிபோல
வாழ்வின்  இனிதான  சாந்தியை  பெற
தோழமையே ,
                               நீயெனக்கு  தோழனாயிரு…

கலைகளின்  செல்வியும், வித்யாவின்  விஜயமும்,
மீனாய்  சீறிப்பாய்ந்து  நிதமும்  நித்திமாய்
கலாமின்  கனவைப்போல பாரினில் கவியாய்
பவனி  வரும் ,
                               சகியே  உன் துணையிருந்தால் !

அசோகச்  சக்கரத்தின்
ஆரத்தில் நட்பு !

பாலன்  குமரனின்
ராம்ராஜ்யமும்  நட்பு !

முத்தும்  வைரமும் சேர்ந்த
மணிமகுடத்திலும்  நட்பு !

கணேசனின்  தும்பிக்கையும் நட்பு !
நாளையின்  நம்பிக்கையும்  நட்பு !

பிரளயத்தின்
புரிதலும் நட்பு !

சுற்றித்திரியும்
ஜீவன்களுக்கு
தாகம்  தீர்க்கும் நீரும் , நட்பு !

லீவிலும் நட்பு ; கனாவிலும் நட்பு !

பிம்பங்களில்
ரேகைதேடும்
மானிடர்களிலும் நட்பு !

பிறப்பிலும் நட்பு ;
பாவத்திலும் நட்பு;
திக்கேங்கும் நட்பு !

கோதையின்  காதலிலும்  நட்பு ;
ல்வியின் சாரத்திலும் நட்பு ;
அடடா , உலகெங்கும் நட்பு !

நட்பிலே ,
பேதமையுமில்லை !
பின்னடைவுமில்லை !

ஜெயத்தின் பாதையில்
சுகுனங்கள் தர , மல்லிகையின் மணம் வீச
எங்கெங்கோ  பூத்து  ஒன்றாய்  கூடிய  மலர்மாலை ;
ஒன்றிரண்டு  உதிர்ந்தாலும்
உலகெங்கும்  மணம்  வீசும் ,

TEN DRAGONS & FIRE BIRDS...

இந்த கவிதை மட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு சிறுகதைகளும் எழுதி கொடுத்தேன்.. அந்த நேரத்தில் கல்லூரியின் முதல்வர் மாறிவிட்டதால் மாணவர் மலருக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். கேட்டால் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள் ( அவ்வளவு மதிப்பு மிக்க கல்லூரி)…இருந்தாலும் அத்தனை நட்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய கல்லூரியை மறக்க முடியுமா .. யாராலும் முடியாது.

நன்றிகளுடன் உங்கள் நண்பன்…

September 1, 2010

பயணமும் நண்பர்களும்…

நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)

அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )

இவர் தான் அசோக சக்கரத்தில் இருக்கும் அசோக் என்ற சிங்கம்.

தொலைதூரக் கல்வியில் MBBS கிடையாது என்ற ஒரே காரணத்துக்காக MCA’வை திருச்செந்தூர்ல ஆதித்தனார் கல்லூரியில் படிக்கிறார்.

இவருடைய வரலாற்றைத் தான் ‘எந்திரன்’ என்று திரைப்படமாக எடுக்கிறார்கள். இவருடைய கதாப்பாத்திரத்தை தான் ரஜினி நடிக்கிறார்.
இவர் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ஊமர் , தெரசா , அடியா, மொக்கைய போடாத, சொன்னு …( அர்த்தமெல்லாம் கேட்க கூடாது )
என்னுடைய நல்ல நண்பன். பாசக்காரனும் கூட…

அடுத்து ரவி பாலன்.  பூச்சிக்காட்டு வேங்கை என்பதை  எலி என்று மாற்றிக் கொண்டவர்.

என்ன பன்றார்னுதெரியலையா…? புல்லோட தன்மையை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஆராய்ந்து முடித்து விட்டார். இப்போது ஆராய்ச்சி கூடத்துக்கு போன் செய்து சில மருந்துகளை வர செய்து  புல்லின் மீது தெளிக்கிறார்.

காய்ந்த புல்லை பசுமையாக்கி ஓய்வு எடுக்கிறார். அவர் ஓய்வு எடுக்கட்டும். நாம புறப்படலாம்….

August 6, 2010

பில்லா 007 ( நாடகம் )…

“பில்லா 007 __ பேர கேட்டவுடனே அதிருதில்ல” அப்படின்னு சொல்லி பெரிய பில்டப் கொடுக்க ஒண்ணுமே இல்லங்க.

இரண்டாமாண்டு படிக்கும் போது(2008’ல்)  அரங்கேற்றிய நாடகம் தான் இது.
நாடகத்தின் கதை ,  தலைப்பை பார்த்தே தெரிந்திருக்கும். அங்கு ஆயுத கடத்தல் என்றால் இங்கு பன், பிரெட் , ஜாம். . .
வசனங்கள், நடிப்பு  தான் நாடகத்தில் நாடி.

அறிமுகம் :
இவன் தாங்க பில்லா. கதையோட கருப்பு நாயகன். இல்லையில்ல கதாநாயகன்.

DSP( ஜிப் போட மறக்காத )
பெயர்  தெரியவில்லை( பில்லாவுக்கு கைப்புள்ள )
ஜேஜே ( என்ன கொடும சார் இது )

இவங்க எல்லாரும் கொஞ்ச நேரம் மொக்கைய போட்டதுக்கு அப்புறம் ,

இதோ இந்த பன் சாப்பிடுகிறவரை பில்லா கொன்று விட திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. ( அடுத்து என்ன என்று நடிப்பவர்கள் உள்பட அனைவரும் குழம்ப )

ஒரு குத்து பாட்டு…

பாட்டு முடியவும் காவலர்களால் பில்லாவின் ஆட்டம் முடிந்தது.
பின்பு , புதிய பில்லா உதயமாகிறான்.

புதிய பில்லாவுக்கு ஜாம் வகைகளை பற்றி கற்றுத்தரும் DSP என்ன பண்றார்னு நீங்களே பாருங்க.( படத்த கிளிக் பண்ணி பாக்காதீங்க )

எல்லாவற்றையும் பில்லாவுக்கு கற்று கொடுத்துவிட்டு,
DSP :  என்ன பில்லா , ஜாம் எல்லாம் புரிஞ்சுதா ?
Billa : எல்லாம் முடிஞ்சுது.

பல அரியர்களுக்கு பின் பயிற்சியில் தேறிய பில்லா இந்த டீக்கடையின் முன்பு தன் நினைவை இழந்த பில்லாவாக கடத்தல்காரர்களிடம் சேர்கிறான்.
(சத்தியமா இது டீ கடைதாங்க.அவர் டீ  தாங்க ஆத்துறார்.)

இவ்வாறு நகரும் கதையில் ஒருநாள்,
வேவு பார்க்கும் பில்லா DSP’யிடம் பேசுவதை சக கடத்தல் மன்னன் டக்டீஸ் பார்த்து விட, பில்லாவுக்கு தெரியாமல் DSP’யை கடத்தி வைத்து துப்பாக்கிமுனையில் பில்லாவை மிரட்டுவார் டக்டீஸ்.

DSP : டேய் துப்பாக்கி குறி வைச்சிருகுற இடம் சரியில்ல.

கொஞ்ச நேர வசனத்துக்கு பிறகு நடக்கும் சண்டையில் கடத்தல் கும்பல் பிடிபடுகிறது.

சுபமாக சுபமடைந்தது நாடகம்…

நடிப்பு என்ற பெயரில் 20 நிமிடங்கள் கொடுமை படுத்தியவர்கள் :
பில்லா                                                    ஜான் வில்லியம் ராஜ்
பில்லாவின் தோழன்                             பூபால அருண் குமரன்
பில்லாவின் தோழி                                பிரவீன்
காவலர்                                                   டல்ஹோசி பிரபு
சக கடத்தல் மன்னன்                             இசக்கி முத்து
அடியாள் 1                                               கண்ணன்
அடியாள் 2                                               ரூபன்
அடியாள் 3                                               வைரவன்
பன்  சாப்பிடுபவர்                                   சுப்பையா கணேஷ்
காவலரை பிடித்து வைத்திருப்பவர்     ரவி பாலன்
டீ கடை முதலாளி                                  விஜய குமார்

மேலும் சில காட்சிகளின் நிழல்ப்படங்கள் :

 

நன்றி…