These twits are make my day 👍
twitter.com/teakkadai: மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!
twitter.com/jeevalancer: குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்!
twitter.com/bommaiya: தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!
twitter.com/DrEzhilan: ரஜினி படம்னா, ரிலீஸுக்குப் பிறகு பஞ்சாயத்து. கமல் படம்னா, ரிலீஸுக்கு முன்னாடியே பஞ்சாயத்து. #அம்புடுதேன்!
twitter.com/MissLoochu: “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!
twitter.com/Railganesan: OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!
twitter.com/prakashalto: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!
twitter.com/chitrangadhai: ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று… ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’
twitter.com/BoopatyMurugesh: ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். # ஆணாதிக்கச் சமூகம்!
twitter.com/ikrishs: ட்ரெய்ன்ல சைடு லோயர்னா, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!
twitter.com/rajesh_off: பத்தாம் வகுப்புல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பொண்ணுகிட்ட ‘அடுத்து என்ன பண்றதா ப்ளான்?’னு கேக்கிறானுங்க ஜெயா டி.வி-யில! # அடுத்து ப்ளஸ் ஒன்தான். இதுகூடத் தெரியாம…
twitter.com/stalingsk50: அடிக்கடி பாராட்டு விழா நடந்தால், அது தி.மு.க. ஆட்சி. அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தால், அது அ.தி.மு.க ஆட்சி. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!
twitter.com/Iniyavan_Voice: கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க… அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!
twitter.com/krishs: சாம்பார் சாதத்தை குட்டி டப்பால வாங்கிட்டு வர்றாங்க. பேசாம, அந்த ரெண்டு வாய்ச் சோறை கடைக்காரங்களையே ஊட்டிவிடச் சொல்லி, சாப்பிட்டு வந்திரலாம்!
twitter.com/natpuanrajesh: ஒருவேளை நாமெல்லாம் செவ்வாய்க் கிரகத்துல பொறந்து, செத்த அப்புறம் இந்த நரகத்துக்கு வந்துட்டோமோ! # டவுட்டு!
twitter.com/kalasal: இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியில் இருந்து அழிப்பதற்கு, ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப் படுகிறது. :(:(
twitter.com/Anandraaj04: ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்கவேண்டும் என, முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் பல காத்திருப்பதாகச் சொன்னார்கள் கடைசியில பார்த்தா… அது இட்லிக் கடைகளாம்!
twitter.com/writercsk: சமூக வலைதளங்களில் யாரும் கற்க வருவது இல்லை; எல்லோரும் கற்பிக்கவே வருகிறார்கள்!
twitter.com/jv.balaji: நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கோம். ஆனா, நூடுல்ஸே நொந்தது இதுதான் முதல் தடவை!
twitter.com/SriDevDev: நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே… அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?
twitter.com/meenammakayal: சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது… யாருக்கு யார் அடிமை என்பது!
twitter.com/LegDada: ‘மாப்ள அர்விந்த் சுவாமி மாதிரி இருப்பாரா?’னு கேட்க ஆரம்பிச்சதில் இருந்தே அவன் வில்லன்தான்டா எங்களுக்கு!
twitter.com/goingfake: ‘சத்தியமா நம்மளை உள்ள விடமாட்டாங்க’னு சின்ன காக்காமுட்டை சொல்றது ஞாபகம் வரும்… மேட்ரிமோனி சைட்ல சில பெண்கள் புரொஃபைல் பார்க்கும்போது!
facebook.com/nagarajachochthan: ஆபீஸ் லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டே கிளையன்ட் கால் அட்டெண்ட் பண்ற சுகம் இருக்கே… அந்தக் கால ரைட்டர்கள் ஆபீஸ்ல உட்கார்ந்து இலக்கியம் படைச்சதுக்கு ஈடானது!
twitter.com/vandavaalam: வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராகவும், நம்ம மனசுக்கு நாமே வக்கீலாகவும் இருப்பதால்தான்!
twitter.com/kaviintamizh: முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!
twitter.com/bottatto: Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!
twitter.com/yaaro_: ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!
twitter.com/ponraam: நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!
twitter.com/kumarfacutty: யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!
twitter.com/Jana_Vel: பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் ‘எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!
facebook.com/tmaniji: முதல்ல நீதியை வாங்கினாங்க; இப்ப சத்யம்; இன்னும் நேர்மை பாக்கி இருக்கே!
twitter.com/Senthilbds: ஆத்திகன், கடவுளை ஊத்தி ஊத்திக் கழுவுறான்; நாத்திகன், கழுவிக் கழுவி ஊத்துறான்!
twitter.com/ashokiie: ‘மூடு டாஸ்மாக்கை மூடு…’ பாடலுக்காக கோவனைக் கைதுசெய்த தமிழ்நாடு அரசு, ‘ஓப்பன் த டாஸ்மாக் பாடலுக்காக அனிருத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்!
twitter.com/vanithaj: வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது. டெக்னாலஜி மனஅழுத்தம் தருகிறது!
twitter.com/powshya: எவ்வளவு பிற்போக்கா சிந்திச்சாலும், கடவுள் நம்பிக்கை வர மாட்டேங்குது. எவ்வளவு பகுத்தறிவா சிந்திச்சாலும் பேய் பயம் போக மாட்டேங்குது!
twitter.com/mpgiri: ரஹ்மானே லாங் டிரைவ் போனா, ராஜா பாட்டுதான் கேட்பார்னு நினைக்கிறேன்!
twitter.com/gowtwits: ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!
twitter.com/Siva_D_offl: அஜித் – விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள். தெரிந்துவிட்டால், ஆயுத சப்ளையை ஆரம்பித்துவிடுவார்கள்!
twitter.com/deepishtalks : ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!
twitter.com/ini_avan : ‘உயிர் பலியைத் தடுக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை’ – அப்போ டாஸ்மாக்ல சத்து டானிக் விக்கிறாங்களா யுவர் ஹானர்?
twitter.com/suriikumar: இந்தியாவில் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதன் அர்த்தம், ‘நகருப்பா… வழியில நிக்காதே’ என்பதே!
twitter.com/laksh_kgm : கடவுளைப் படைத்தவனே இன்னும் சுத்தியலும் கையுமாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறான்!
twitter.com/minimeens: அவன் – ஹலோ! அவள் – சொல்லுங்ணா! # உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை!
twitter.com/ashoker_UHKH : மீசை வெச்சா சந்திரன்; மீசை எடுத்தா இந்திரன்; மீசையே முளைக்கலேனா எந்திரன்!
twitter.com/jill_online: ஒருவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அவனை இந்தப் பெண்கள் படுத்தும்பாடு இருக்கிறதே… அம்மம்மா அய்யய்யோ!
twitter.com/Lorrykaran: அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!
twitter.com/ManiMaindhan: கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. `ஏன் இப்படி இருக்கிறார்?’ என்பதில்தான் என் எல்லா சந்தேகமும்!
twitter.com/kasaayam: பசங்க குடிச்சுட்டு `மச்சி ஸ்மெல் வருதா?’னு ஊதிக் காட்டுற மாதிரிதான், பொண்ணுங்க மேக்கப்ல `கொஞ்சம் ஓவரா இருக்கா?’ன்றதும்!
twitter.com/tamilreporter: நிலம் கையகப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பில்லைன்னும் சொல்லியாச்சு # விவசாயிகளின் மீது அக்கறைகொண்ட அரசாங்கமேதான்!
twitter.com/ammuthalib: குஸ்கா என்பது ‘மக்கள் பிரியாணி’!
twitter.com/i_Soruba: `வீட்ல இருக்கும்போதுகூட வேலை செய்யணுமா?’ `வீட்ல இருக்கும் போதாவது வேலை செய்’ – அம்மா நோஸ் ஆல் டீட்டெய்ல்ஸ் 🙁
twitter.com/thoatta : காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!