Tag

politics

August 26, 2015

அரசியல்

விலையில்லையென்ற போதும்
பணம் கொடுத்து பெற்ற
பாமரன் சொத்தடா,
இந்த பாரதம் !!!

செத்த பிணங்களுக்கு இடையே
மரம் ஒன்றை எழுப்பி
பழம் தின்ன சொல்லுதடா,
இந்த அரசியல் !!!

இரண்டிலும் உள்ள
ஒற்றுமையும் அறியாமல்
வேற்றுமையும் புரியாமல்
அறிவாளியென
எண்ணம் கொண்டு வாழுதடா,
இந்த ” …………… ”


தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா

May 21, 2015

அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?

அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?

நலமே…

இது ஒரு நல்ல கேள்வி. நல்ல பதிலும் கூட. ஆனால் நடைமுறை??
இங்கே இளைஞர் அணியில் கூட வயதானவர்களே அதிகம். வயது ஒரு தடை இல்லை தான், அதை நான் மறுக்க போவதில்லை. ஆனால் நல்ல திட்டங்களும், எண்ணங்களும் மனதில் பிறந்து பணத்தில் அழிந்து போகிற இந்த அரசியலில், துடிப்பு மிக்க இளைய தலைமுறையை காணுவதே கானல் நீராய் இருக்கிறது.

வாழ்வை நம்பிக்கை கொண்டு அழிக்க முடியுமா என்றால் அதற்கு நம் இந்திய மக்களே உதாரணம் என்று சொல்லலாம். நானும் இந்தியனே.

இளைஞர்களை பற்றி பல தவறான கண்ணோட்டமும் காணும் செய்தியும் மக்களை இளைஞர்களை பற்றி தவறாக சித்தரிக்கிற வைக்கிறது.

அரசியலில் மாற்றம் வராதா என ஏங்கும் இந்திய மக்களில் நானும் ஒருவனாய் சில சிந்தனைகளை தெளிக்கவே இக்கட்டுரை.

அரசியல் ஒன்றும் சாக்கடை அல்ல. அது அமுது. பருகியவர்கள் அது அடுத்தவர்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் அதை சாக்கடை என ஏமாற்றுகிறார்கள்.

சரியா தவறா கேள்வியில் நம் வீட்டு சின்ன குழந்தைகள் கூட பள்ளியில் குழப்பத்தோடு விடை அளிக்கும் ஒரு கேள்வி :: வாரிசு அரசியல் இந்தியாவில் ஒழிந்ததா? என்பதே. பெரியவர்களுக்கே இன்னும் விடை தெரியவில்லை.

“அரசியலில் மாற்றம் வேண்டும்” என இருக்கும் அதனை பேருக்கும் ஆசைபட்டாலும் கிடைக்காத பொம்மை ஆகி விட்டது இந்த அரசியல்.

இதற்கு தீர்வு தான் என்ன? நம்மில் பலபேரிடம் இதற்கு சரியான தீர்வு இருக்கும், எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி என் எண்ணத்தை பகிர்கிறேன்.

அரசியல் மட்டுமே நாட்டின் முனேற்றத்துக்கு காரணம் என கூறி விட முடியாது. மக்களும் தான்.

கிராமங்கள் மீது காந்தி கொண்ட நம்பிக்கை போலவே நான் நம்முடைய நாட்டின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும் இடம் தெருக்கள் என கருதுகிறேன். ஆம். தெருக்களே தான்.

உங்கள் தெருவில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒன்று கூடுங்கள் பேசுங்கள். உங்கள் தெருவில் உள்ள பிரச்சனைகளை நீங்களே பேசி தீர்த்துகொள்ளுங்கள். தண்ணீர் பிரச்சனையா? உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். தெருவிளக்கு பிரச்சனையா மற்றோருவரை தேர்ந்தெடுத்து தீர்வு காணுங்கள்.

இப்போது உங்கள் தெரு ஒன்றாகி இருப்பின், தெருக்களை ஒன்றிணைக்கலாம். பக்கத்துக்கு தெரு தன்னிறைவு அடைந்ததா என உங்கள் தெரு குழுவில் இருந்து ஒருவர் மற்ற தெருக்களின் கூட்டத்துக்கு சென்று தொடர்ச்சியாக கலந்து உரையாடுங்கள். மற்ற குழுவில் உள்ளவர்களை அடுத்த குழுவுக்கு சென்று உரையாட, திட்டங்களை பரிமாற செய்யுங்கள்.

ஓவ்வொரு தெருக்களும் தங்கள் குறைகளையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் கவனித்து கொண்டால் தேர்தல் என ஓன்று வந்தால் யாரும் நம்மிடைய வந்து “உங்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன்” என விலை பேச முடியாது. நாமும் விலை போக வாய்ப்பும் இல்லை.

இது சாத்தியமா? – இது இங்கே நடைமுறையில் இருந்த, தற்போது மங்கி போன ஒரு திட்டம்.

ஆம். RSS – ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் என அழைக்கப்படும் இந்துகளின் இயக்கத்தின் தொடக்கமே இந்த நடைமுறை தான். முதலில் ஒரு தெருவில் உள்ள இந்து நண்பர்கள் சேர்ந்தார்கள். பின்பு அருகருகே என இந்திய தேசம் முழுவதும் வியாபித்த அமைப்பு தான் RSS. இங்கே நான் மதத்தை புகுத்த விழையவில்லை. அவர்கள் கொடுத்த அந்த திட்டத்தை தான் இங்கே மாற்றி அமைத்திருக்கிறேன்.

இந்துகளாக இணைத்தது போல, நாம் ஏன் இந்தியாவுக்காக இணைய முடியாது. முடியும். மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து பார்க்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது.

சாபக்கேடுகளில் இருந்து இந்தியா நிச்சயம் ஒருநாள் கனவும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களால் மீட்டு எடுக்கமுடியும்.

அதுவரை காத்திருப்புகளுடன் – நம்பிக்கை கொண்ட, பணம் வாங்காமல் ஓட்டு போட செல்லும் உண்மையான இந்தியர்களில் நானும் ஒருவன்

தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா