Tag

பிரமிளா

December 7, 2021

பிரியாணி

உன் விரல் தொட்டு

வேக சென்றதால்

கோழிகள் சொர்க்கம் சென்றது

அதன் ருசியில் மெய் மறந்து

நான் மோட்சம் கொண்டேன்

(இன்னொரு பிளேட் கொடு தங்கம்)

June 6, 2018

மீனும் நானும்

மீனும்🐟 நானும்🧑 இயல்பை மீறி உனை நோக்கி ஈர்க்கப் பட்டோம்🏄‍♂, நிலவோடு நிழலாடிடும்🌛 ஆற்றங்கரையை உன் மேனியால்👸 நீ ஆற்கொண்ட போது…! ✨

March 7, 2018

உதயமான நாள்

இனிமை பொங்க
பசுமை வளர்த்து
தன்மை உயர
தாயகம் உயர்த்தும்
பெண்ணியமே

எண்ணங்களை திண்ணமாக நிறைவேற்றி,
வண்ணங்களை வாழ்வுகளுக்கு
பகிர்ந்தளிக்கும்
பெண்ணினமே,

எழில் தரும் சூரியனே
தளிர் விடும் பொன் மலரே
தடாகத்தின் தாமரையே
பூவுலகில் பூமகளே

உனக்கு
உதயமான நல்வாழ்த்துக்கள்

November 2, 2017

கண்ணீர்

பிரிவின் துயரில் உன் கண்ணீர்

துடைந்தெறியும் தூரத்தில் என் விரல்கள்

விடியல் பூத்ததும் விரைந்து வரும் கலங்காதே, என் கண்ணே 

November 2, 2017

நேரம்

உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும்

அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய்.

அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை !