Tag

நாடகம்

August 3, 2011

அந்நியன் 009 (நாடகம்)

அந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம்.
கதை , ரொம்ப சிம்பிள்..

அம்பியான   இவர்,

நந்தினி என்ற

இவளை காதலிக்கிறார்.

அம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி…

பஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி. 

இருவருக்கும் காதல் மலர்கிறது.

இதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான்.

ஒருநாள் நந்தினி ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி ப்ளாக்கில் விற்க வேகமாக செய்கிறாள். அந்நியன் இடைமறித்து மண்ணெண்ணையை ப்ளாக்கில் விற்பது தவறு என நந்தினியை கொலை செய்கிறான்.

இதையறிந்து ரெமோ கொதித்தெழுந்து அந்நியனிடம் “ஏண்டா நந்தினியை கொன்றாய்? ” என கேட்க அந்நியன் காரணத்தை சொன்னதும் ரெமோ சரியென கிளம்பி விடுகிறான்.
அந்நேரம் அங்கு கல்யாண வீட்டில் மூன்று பந்தி சாப்பிட்டு வந்த பாடிசோடாவை,

“நீ செய்தது தப்பு” என கூறி கொன்று விடுகிறான் அந்நியன்.

பின்பு

” அனைவரும் C + + புத்தகத்தின்படி தண்டிக்கப் படுவர் ” என்ற எச்சரிக்கையுடன் நாடகம் நிறைவடைகிறது.

நடந்தது அனைத்தையும் தனது கமிஷ்னர் அறையில் இருந்து தன் கூர்மையான பார்வையால் கவனித்துக் கொண்டு இருக்கிறார் கமிஷ்னர் கந்த சாமி…
தான் வந்தால் அந்நியனை கொலை செய்து தான் பிடிப்பேன் என்று சொன்னதால் இவரை நாடகத்துக்குள் கொண்டு வராமலே நாடகம் நிறைவடைந்தது.

:: நாடகத்தின்  ஒளிவடிவம் ::

[youtube=http://www.youtube.com/watch?v=BXoMiszkOcQ]

முழு திரையில் காண :: இங்கே :: சொடுக்கவும்.

இந்த நாடகம் 2008ம் ஆண்டு கல்லூரி தினவிழாவில்அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் மிகவும் ரசிக்கதக்கது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ,
1. பாடி சொடாவின் ஆட்டம்.
2. “நீ கொன்னா கூட குத்தமில்ல” என்ற பாடல் வரும் இடம்.
3. நாடகத்தின் இறுதி வசனம்.

நாடக குழுவினர் :

அம்பி                                —  சுடலை மணி
அந்நியன்                        —  தீபன்
ரெமோ                             —  ரூபன்
நந்தினி                            —  பிரவீன்
பாடிசோடா                    —  கண்ணன்
கந்தசாமி                        —  விஜயகுமார்

மேலும் சில நிழற்படங்கள் :

நன்றி…

என்றும் தீராத நட்புடன்,

ரா . பூபால அருண் குமரன்…

August 6, 2010

பில்லா 007 ( நாடகம் )…

“பில்லா 007 __ பேர கேட்டவுடனே அதிருதில்ல” அப்படின்னு சொல்லி பெரிய பில்டப் கொடுக்க ஒண்ணுமே இல்லங்க.

இரண்டாமாண்டு படிக்கும் போது(2008’ல்)  அரங்கேற்றிய நாடகம் தான் இது.
நாடகத்தின் கதை ,  தலைப்பை பார்த்தே தெரிந்திருக்கும். அங்கு ஆயுத கடத்தல் என்றால் இங்கு பன், பிரெட் , ஜாம். . .
வசனங்கள், நடிப்பு  தான் நாடகத்தில் நாடி.

அறிமுகம் :
இவன் தாங்க பில்லா. கதையோட கருப்பு நாயகன். இல்லையில்ல கதாநாயகன்.

DSP( ஜிப் போட மறக்காத )
பெயர்  தெரியவில்லை( பில்லாவுக்கு கைப்புள்ள )
ஜேஜே ( என்ன கொடும சார் இது )

இவங்க எல்லாரும் கொஞ்ச நேரம் மொக்கைய போட்டதுக்கு அப்புறம் ,

இதோ இந்த பன் சாப்பிடுகிறவரை பில்லா கொன்று விட திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. ( அடுத்து என்ன என்று நடிப்பவர்கள் உள்பட அனைவரும் குழம்ப )

ஒரு குத்து பாட்டு…

பாட்டு முடியவும் காவலர்களால் பில்லாவின் ஆட்டம் முடிந்தது.
பின்பு , புதிய பில்லா உதயமாகிறான்.

புதிய பில்லாவுக்கு ஜாம் வகைகளை பற்றி கற்றுத்தரும் DSP என்ன பண்றார்னு நீங்களே பாருங்க.( படத்த கிளிக் பண்ணி பாக்காதீங்க )

எல்லாவற்றையும் பில்லாவுக்கு கற்று கொடுத்துவிட்டு,
DSP :  என்ன பில்லா , ஜாம் எல்லாம் புரிஞ்சுதா ?
Billa : எல்லாம் முடிஞ்சுது.

பல அரியர்களுக்கு பின் பயிற்சியில் தேறிய பில்லா இந்த டீக்கடையின் முன்பு தன் நினைவை இழந்த பில்லாவாக கடத்தல்காரர்களிடம் சேர்கிறான்.
(சத்தியமா இது டீ கடைதாங்க.அவர் டீ  தாங்க ஆத்துறார்.)

இவ்வாறு நகரும் கதையில் ஒருநாள்,
வேவு பார்க்கும் பில்லா DSP’யிடம் பேசுவதை சக கடத்தல் மன்னன் டக்டீஸ் பார்த்து விட, பில்லாவுக்கு தெரியாமல் DSP’யை கடத்தி வைத்து துப்பாக்கிமுனையில் பில்லாவை மிரட்டுவார் டக்டீஸ்.

DSP : டேய் துப்பாக்கி குறி வைச்சிருகுற இடம் சரியில்ல.

கொஞ்ச நேர வசனத்துக்கு பிறகு நடக்கும் சண்டையில் கடத்தல் கும்பல் பிடிபடுகிறது.

சுபமாக சுபமடைந்தது நாடகம்…

நடிப்பு என்ற பெயரில் 20 நிமிடங்கள் கொடுமை படுத்தியவர்கள் :
பில்லா                                                    ஜான் வில்லியம் ராஜ்
பில்லாவின் தோழன்                             பூபால அருண் குமரன்
பில்லாவின் தோழி                                பிரவீன்
காவலர்                                                   டல்ஹோசி பிரபு
சக கடத்தல் மன்னன்                             இசக்கி முத்து
அடியாள் 1                                               கண்ணன்
அடியாள் 2                                               ரூபன்
அடியாள் 3                                               வைரவன்
பன்  சாப்பிடுபவர்                                   சுப்பையா கணேஷ்
காவலரை பிடித்து வைத்திருப்பவர்     ரவி பாலன்
டீ கடை முதலாளி                                  விஜய குமார்

மேலும் சில காட்சிகளின் நிழல்ப்படங்கள் :

 

நன்றி…

July 15, 2010

நந்தனார் நாடகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக இறைவன் சிவபெருமானின் தொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தோம்…நாடகத்தின் பெயர் ” பக்தனின் பெருமை
அதில் ஒரு காட்சி நிழல்படமாக,


ஆதித்தன், செல்வ கணேசன், சண்முகவேல், கேசவன், நான்(பூபாலன்).
நான் தாங்க நந்தனார்…பல காமெடி நடந்ததுங்க இந்த நாடகத்துல…

இந்த  நாடகத்தை அரங்கேற்ற பெரிதும் உதவியது எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.சிவகலை.

இந்த நாடகத்துல என்னுடைய முதல் வசனம் :
( காட்சி – 1   , இடம் : ஆதனூர்   , நந்தனாரும் நான்கு அடியார்களும் )
நந்தனார் : ” செய்தொழிலே சிவன் தொழில். சிவனை எண்ணி எத்தொழில் செய்தாலும் அது சிவனுக்குரியதாகிறது. சிவனை மறந்து செய்யும் தொழில் இழிதொழிலாகிறது.”

எப்படி வசனம் ஞாபகம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது…

நந்தனாரின் வசனம் கொண்ட குறிப்புகள் என்னிடம் உள்ளது. நாடகத்தை வீடியோ எடுக்கவில்லை என்பது சின்ன வருத்தம்.

“நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்று பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஏன் ,  உங்களையும் பலர் அப்படி கூறி இருக்கலாம்…

நந்தனார் சிவபெருமானின் தொண்டர்.63 நாயன்மார்களில் ஒருவர்.
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் நந்தனாருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.ஆகவே  வாசலில் நின்றே கும்பிட்டுவிட்டு சென்று விடவேண்டும். சிவபெருமானின் முன்னால் உள்ள நந்தி சிவபெருமானை பார்க்க விடாதபடி மறைத்துக்கொண்டு  இருந்தது. ( இதுதான் “நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்பதன் பொருள் ).
நந்தனார் சிவபெருமானை காண முடியாததால் நந்தியை சற்று நகரும்படி சிவனை நோக்கி பாடல் ஒன்று பாடுவார். நந்தி நகர்ந்து சிவபெருமான் காட்சி தருவார்.

நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்றும் அழைப்பார்கள். நந்தனாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ::: இங்கே


நந்தனாரின் வரலாற்றுத் திரைப்படத்தில் சில காட்சிகள் :
1. நந்தனார் சிவபெருமானை வணங்கும்படி அறிவுறை கூறும் காட்சி( அற்புதமான வரிகள் ) ,

[youtube=http://www.youtube.com/v/0r5FMasD0zo]

2. பிற உயிர்களை கொல்ல கூடாது என்று மக்களுக்கு அறிவுறை கூறும் காட்சி ,

[youtube=http://www.youtube.com/v/h9XJFDpViPg]

நந்தியை சற்று விலகி அமரும்படி கூறும் பாடலை காண ::: இங்கே

நாடகத்தில் முடிவில் நந்தனார் தீயில் இறங்கி உயிருடன் வெளியே வந்து  தன் பாவங்களை போக்கிகொள்வார். பின்பு “” ஹர ஹர மஹா தேவா ! சம்போ சதாசிவா ! பரமானந்தம் அடைந்தேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருவதாகுக .. வாருங்கள் , அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிதம்பரநாதனை சேவிப்போம் “” என்று நந்தனார் கூறியவாறு நாடகம் நிறைவடையும்.

நன்றி…