Tag

நடனம்

July 26, 2011

இளைஞர் கலைவிழா – விபரீதம்

நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால்  நடந்தது விபரீத விளைவு.

இளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம்.

பயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம்.

அந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள் நாங்கள் “அப்படி என்னத்த தான் ஆடி கிழிக்கிறோம்”னு பார்க்க வந்தார்கள்.

எங்களுக்கு ஒரே  வெட்கம். அது மட்டுமில்லாம நாங்க ஆடுறது பாத்து எங்களோட நடன அசைவுகளை அவங்க சுட்டுஅவங்களோட ஆட்டத்துல சேத்துகிட்டாங்கன்னா ?? ( அப்படியே அறுவடை பண்ணிட்டாலும்)

அதான். நாங்க கொஞ்சம் உஷாரா கதவு மற்றும் ஜன்னல்களை மூடிட்டோம். (அந்த மொக்க கதவ மூடினாலும் ஒண்ணு தான் மூடாட்டியும் ஒண்ணுதான்) இருந்தாலும் அவங்க கதவை தள்ளிக் கொண்டு கதவை திறக்க முயற்சிக்க, நாங்க ஏதோ அறிவாளிதனம் என்று எண்ணி கதவை அறையின் உள்பக்கம் இருந்து இறுக்கமாக மூடமுயற்சி செய்தோம். அவர்களும் எங்களுக்கு இணையாக வெளியில் இருந்துஉள்ளே தள்ள முயற்சித்தனர்.

விளைவு, முதலாம் ஆண்டு BCA மாணவி அமுதாவின் கையில் உள்ள சதைபிடிப்பு கதவின் இடையில் மாட்டிக்கொண்டது.

மாணவிகள் அனைவரும் சப்தம் போட, ஏதும் அறியாத நாங்கள் உள்ளிருந்து மேலும் வேகமாக பூட்ட முயற்சித்தோம். சற்று நேரத்தில் நாங்கள் வலுவை குறைத்துகொண்டு வெளியே வந்தால் , அதிர்ச்சி..

அந்த பெண்ணின் கண்களில் மயக்கத்தையும், சுற்றி இருந்த அவள் தோழிகளின் கண்களில் தீயையும் பார்த்தேன்.

நாங்கள் செய்வது அறியாது திகைத்த போது விஷயம் மேலிடம் சென்றது. கல்லூரி முதல்வர் மகேஷ்குமார் வந்தார். அமுதாவுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு வீட்டிக்கு செல்ல உத்தரவு இடப்பட்டது.

கல்லூரிக்கே விஷயம் தெரிந்தது. என்னிடம் வந்து அனைவரும் என்ன செய்தாய் ? கொலை கேஸ் ? என மிரட்டினர்.

நடுவுல நம்ம நாட்டாமை வந்து,
எந்த பிரச்சனைக்கும் போகாதன்னா கேட்குரியா ?? தலை விதிடா என்று நொந்து கொண்டார்.

மூன்றாம் ஆண்டு பர்வின் அக்கா ” நீ தான் மெயின் குற்றவாளியாமே” என்று கலாய்க்க,

கணிணி துணைஆய்வாளர் ஜெயகலா ஆசிரியரும் நடந்ததை தெரிந்து விசாரணை நடத்தினார்கள்.

இப்படியாக  அன்றைய பொழுது நிறைவடைந்தது.

அடுத்த நாள் : கல்லூரியில் இளைஞர் கலைவிழா (12-10-2007)

அமுதா காயத்துக்கு மருந்திட்டு வந்திருந்தாள். பேசினேன். மன்னிப்பு கோரினேன். வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டேன்.

மீண்டும் அதிர்ச்சி என்னை தாக்கியது. (நீங்க ஒன்னும் அதிர்ச்சி ஆகாதீங்க ) அவள் வீட்டில் மற்றவர்களை சமாளித்து விட்டதாகவும், அவளுடைய பாட்டி மட்டும் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறினாள். ( என்ன வார்த்தைன்னு மட்டும் என்கிட்ட கேட்டுடாதீங்க )

அடிபட்ட உடன் அவளது தோழி ராஜி கோபமாக என்னை பார்த்து முறைத்தபடி சென்றாள். மறுநாள் சமாதனம் ஆகிவிட்டோம்.

இப்படியாக பல நிகழ்வுகளுக்கு பிறகு அந்த தோழிகள் ஆடிய பாடல் :: புதுபேட்டை படத்தில் இடம் பெறும் “வரியா வரியா”… ( குறிப்பு : மேலே படத்தில் உள்ள நடனம் கல்லூரி நாள் விழாற்கு ஆடியது. “வரியா” பாடல் அல்ல)…

இந்நாளின் நிகழ்வுகள் பற்றி என் நாளேட்டின் குறிப்புகளை காண :: இங்கே :: செல்லவும்.

இப்படிக்கு

என்றும் நட்புடன் உங்கள் நண்பன்

November 13, 2010

இது நியூ ஏஜ் ஆத்திசூடி…

மூன்றாம் வருட கல்லூரிநாள் விழாவில் நண்பர்களுடன் சேர்த்து கலக்கிய ஒரு குத்தாட்டம்…

[vimeo http://vimeo.com/16340750 w=400&h=300]

நடன குழுவினர்கள்:
முன்வரிசையில்,
பிரவீன் குமரன் (இடம்), டல்ஹௌசி பிரபு(வலம்).
பின்வரிசையில்,
பூபால அருண் குமரன் (இடம்), தளவாய்(வலம்).
இடையில்  வந்து கலக்குபவர், சிவராஜ்.

இந்த நடனம் ஆட பெரிதும் உதவியது சாத்தான்குளம் என்ற சற்றே பெரிய கிராமத்தை சேர்த்த அனிஷ் மற்றும் ஜாக்கப் சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த பாடலுக்கு நடனம் பழகிக் கொண்டு இருந்த போது வந்து பார்வையிட்டு குறைகளை நிறையாக்க பாடுபட்ட உள்ளங்கள்,

இவர் தான் இசக்கி முத்து. ஒரு சிறந்த பேச்சாளர். (Why Blood, Same Blood)…
அடுத்து,

இவர் ரவிபாலன். இடப்பக்கம் அமர்த்து இருப்பவர் அஷோக். வலப்பக்கம் சுப்பையா கணேஷ். முகம் காட்டாமல் ஒரு நடன அசைவை செய்து காட்டி கொண்டு இருப்பவர் ஜான் வில்லியம் ராஜ். அது இவர் தான்.

இவர் தான் விஜேந்திரன். டான்ஸ் மாஸ்டர் (aka) டீ  மாஸ்டர். நடனம் இவருக்கு கால் வந்த கலை. அட , சத்தியமாங்க. தளவாய் சரியாக ஆடுகிறானா என்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

இவர் ஆடி களைத்து போய் அமர்த்து இருக்கிறார். மேலும் சில புகைப்படங்கள்,
பெரிதாக்க  படத்தை தொடவும்…

நன்றிகளுடன் உங்கள் நண்பன்…

November 12, 2010

தில்லுபரு ஜானே…

நட்புகளுக்கு வணக்கம்,

இரண்டாம் வருட கல்லூரி விழாவில் என் வகுப்பு தோழிகள் கலக்கிய ஒரு நடனம் தான் இந்த தில்லுபரு ஜானே……

இந்த நடனத்தில் நான் கொஞ்சம் கூடுதலாக ரசித்தது கடைசி 15 நிமிடங்கள் தான்.  இளையராஜா தன்னுடைய பெயரை இந்த பாடலிலும் பதித்திருப்பது அந்த நிமிடங்களில் யாராலும் உணர முடியும். மேலும் ,

கலியல் எனும் கலையையும் என் தோழிகள் அதில் முயற்சி செய்து இருப்பார்கள். அது வராமல் போனது இரண்டாவது மேட்டர்…


[vimeo http://www.vimeo.com/16743007 w=400&h=300]

நடன புயல்கள் :

பிரேமா
ராணி ராம் பாலா
விஜய கனகா

பார்கவி
முத்து லட்சுமி
நித்யா

என்ன பாக்குறீங்க , எல்லாமே நல்ல தமிழ் பெயர்கள் தாங்க…
ஏன் இதை சொல்றேன்னா இப்ப எங்கங்க இப்படி நல்ல பெயர்களை கேட்க முடியுது.
சரி அத விடுங்க , ஆட்டம் எப்படி …

புடிசிருந்தா இன்னொரு முறை பாருங்க , இல்லன்னா இன்னொருவருக்கு சொல்லி அவங்கள பாக்க வைங்க…

ஓகே வா , நெக்ஸ்ட் மீட் பண்றேன்…