மாதராய் இவ்வுலகில் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டும்
பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.
என் தாயே,
மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய்
உனை அன்னையாய் பெற மாதவம், நான் செய்தேன்
தூய்மையின் நிறமும் தாய்மையே
வாய்மையின் அறமும் தாய்மையே
தாய்மைக்குக்கு நிகர், தாய்மையே
கருவுற்ற காலம் முதல்
உருபெற்ற காலம் வரை
உன் வயிற்றில் எனை சுமந்தாய்
தரை தொட்ட காலம் முதல்
நடை கொண்ட காலம் வரை
உன் இடுப்பில் இடம் தந்தாய்
நான் பிறக்கும் முன்பே
என் மீது காதல் கொண்டவள் நீ !
நான் இறக்கும் வரை
அதை மறக்கவே மாட்டேன் !
தாயே,
தாய்மையின் பெருமை சொல்ல நீயே ஒரு சாட்சி !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !
அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
தாய்மையின் கனிவு இன்றி
உலகுக்கு உருளகூட தெரியாது!
இது வெறும் வார்த்தையில்லை
நியதி !
காலங்கள் கரைந்தோடினாலும்
தாய்மையின் பெருமை உலகில் பொறிக்கப்படும்
முத்து மகுடங்கள் !
பெண் தெய்வங்களை வழிபடும் நம் பண்பாடு
வெண் நிலவில் வரும் தேய்மானம் என
கண் இன்றி பல கயவர்கள் கத்தினாலும்
விண் உலகமே வியக்கும்படி
தன் முனைப்புடனே முன்னேறும்
பெண் இன்றி அமையாது உலகு !
அப்பெண்ணின் பிறப்பிடம், தாய்மை !
பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிரும்
தாய்மையின் பெருமையை
உலகே வியக்கும்படி எடுத்துரைக்கும்
ஒரு எடுத்துகாட்டு தான்…
தாய்மையே பெண்ணுக்கு பெருமை.
தூய்மையின் நிறமும் தாய்மையே
வாய்மையின் அறமும் தாய்மையே
தாய்மைக்குக்கு நிகர், தாய்மையே…
ஏற்கனவே “பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையையே சற்று மாறுதலுக்கு உட்படுத்தி “தாய்மை” எனும் தலைப்பில் இங்கே கொடுத்துள்ளேன்…
I dedicate this to my Lovely MOM…
—
♥ With Undying Friendship ♥
☛ … R. BooBaLa ARun KumAraN … ☚