Tag

கவிதை

November 9, 2017

திருமண வாழ்த்துக்கள்

👱இரு மனம் 👱‍♀திருமணமாகி

ஒரு 💑 மனமாய் மலர்ந்து 🌺

தினம் தினம் மணம் வீசி 🎼
செழிக்கும் செல்வங்கள் பெற்றும் 💰

அளிக்கும் உள்ளங்கள் கொண்டும் 👼🏻

விழிகளாய் விழிப்புடன் 👀

வாழ்க வளமுடன்!!! 💐

நண்பன் தினேஷ் க்காக அவனது திருமணநாள் (9 நவம்பர் 2017) அன்று எழுதியது

November 7, 2017

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

அன்பு கொண்டு 👱‍♀
ஆனந்தம் பொங்கும் 😁
இன்பமயமான அம்மக்காவே😉
ஈகை குணம் கொண்ட🤝
உண்மையாக 🙏
ஊர் உலகம் அறிந்த 🏕
எங்கள் தாயே ❤
ஏணியாய் நின்று 🌱
ஐயம் இன்றி 💐
ஒற்றை மனிதியாய் 🙅
ஓடமாய் நின்று கரை கண்டாயே🛥 
ஓளடதமாய் நீயிருந்து எங்களை ☕
எஃகாய் மாற்றினாய் 💪
நன்றி 🙏 தாயே 🙏 நன்றி 

✍ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாயே 👩🏻

November 2, 2017

கண்ணீர்

பிரிவின் துயரில் உன் கண்ணீர்

துடைந்தெறியும் தூரத்தில் என் விரல்கள்

விடியல் பூத்ததும் விரைந்து வரும் கலங்காதே, என் கண்ணே 

November 2, 2017

நேரம்

உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும்

அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய்.

அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை !

November 2, 2017

அறியாமை

சில நேரம் உன் சினுங்கள்களை ரசித்தபடி நிற்பதற்கு கடிந்து கொள்வாய்

நீ கடிந்து கொள்வதை ரசிக்கவே நான் உன் சினுங்கள்களை ருசிக்கிறேன் என்பதையறியாமல்