Tag

கவிதை

December 7, 2021

பிரியாணி

உன் விரல் தொட்டு

வேக சென்றதால்

கோழிகள் சொர்க்கம் சென்றது

அதன் ருசியில் மெய் மறந்து

நான் மோட்சம் கொண்டேன்

(இன்னொரு பிளேட் கொடு தங்கம்)

December 24, 2019

கவிதாசி

காதல் கொண்டது போல
அவளை கண்டு சிரித்தான்

சிரிப்பை கண்டுகொள்ளாதபடியான
அவள் பார்வை, சற்றே அரும்பிய
மீசையை முறைத்தது, உண்மையில் வெறுத்தது

வந்தமர்ந்தவன் தயங்கியபடி
முதல் முறை என்றான்

உன் விழியிலேயே அது தெரிகிறது
உன் பெயரென்ன

கணநேர சிந்தனையில் அவனுக்கு அவனே
பெயரிட்டான் ஊரிட்டான் வேலையும் கொண்டான்

வருவோரிடம் சொல்லும் வழக்கமான
திரைகதையை சொன்னாள் அவள்

வீரமாக தாசிவீடு வந்தவன்
வந்ததை மறந்து தயங்கினான்

ஆயிரம் தயக்கத்தை கண்டவள்
அமைதிக்குள் செல்ல அழைப்பு விடுத்தாள்

அடிபணிந்தவனாய் அனைத்தும் செய்தான்
தத்துவம் பேசி “வழக்கம் போல்” ஒருவனானான்

சமாளிக்கும் திறமை இன்றியா
இதனை வருடம் பணம் பார்த்தாள்

பணம் கொடுத்து வாங்கிய நிமிடங்கள் முடிந்தது
விடை கொடுக்கும் தருணத்தில்,
அடுத்த ஆடவனுக்கான நேரம் ஆரம்பமானது

ஆனால் அவளுக்கான நேரம் முடிந்தது

குரல்வளை இரத்தம்
ஆடையில்லா அவனது உடலிலும்
இரக்கமில்லா அவனது கத்தியிலும்

உடலை உயிர் பிரியும் தருவாயை
உணர கூட முடியாதவளாய்
கண்களை மூடிகொண்டாள்

கறையை உடலில் இருந்தும்
தன்னை அகப்படலில் இருந்து அப்புறபடுத்தினான்

எத்தனையோ பேர்களை எப்படி எப்படியோ பார்த்தவள்
அத்தனையும் மாயை என பறைசாற்றி படுத்திருந்தாள்

வீடு வந்தவன், தன் சுயகுறிப்பு நாளேட்டை
சுய பிரகடனம் செய்தபடி
அவள் சென்ற இடம் தேடி காற்றாடியில் இவனும் சென்றான்

உடலை விற்க சென்றவள் உயிருடன் இல்லை என்பதை கூட அறியாமல்
தோழிகளுடன் சுற்றி திரிந்துவிட்டு மாலை வீடு சேர்ந்தாள்
வழக்கமாய் தாமதமாகும் அம்மாவுக்காக காத்திராமல்
தானே தன் வீட்டுபாடங்களை முடிக்க தன் பையை புரட்டினாள்
ஒரு புத்தகம் தன்னை அவசரபடுத்திக்கொண்டு கீழே விழுந்தது
“இனியாள்” “4’ம் வகுப்பு” “ஆ” – பிரிவு, சமூக அறிவியல்.

அவனது உடலை தாங்கிய காற்றடிக்கு விடுதலை கொடுத்தனர் சிலர்
அருகே இருந்த நாட்குறிப்பு,
யாரோ ஒருவளின் வாழ்நாள் குறிப்பென பறைசாற்றியது
அதன் கடைசி வரிகள்,

இனியாள் இனி நல்வாழ்வு வாழட்டும்

 

October 25, 2018

சிசு(க்காக) வதை

கார்காலம், மழை பொய்த்தால்
காத்திருக்கும் மாக்களே
பெண், சிசு பொய்த்தால்
வஞ்சிப்பது பேதைமையன்றோ !!!

நற்பண்பை தறி கொண்டு உரு செய்தால்
கற்போடு உதிப்பவள் பாவையன்றோ;
அவள் உணர்வில் பிழை காணும்
கணவர்கள் கயவர்களன்றோ !!!

sadlady

இறைவனை சாட்சியாக்கி இணைந்த நம் உள்ளம்
குழந்தை இல்லாமையை காட்சியாக்கி பிரிவது;
காத்திருப்பை காரணம் காட்டி
இறைவனின் தரிசனம் இழப்பது போலல்லவா !

இன்பதுன்பமாய் இரவுபகலாய்
எதிலும் பங்கு கொள்ளவே
வேலியாய் தாலி கொண்டேன்
உன்னுடல் பாதி கொண்டேன்

சிசுவை சுமக்கும் கடமைகொண்டதால்
எனை மட்டும் ஏளனம் கொண்டாயோ
இல்லை,
என்னையே காரணமாய் கண்டாயோ ?

Young Couple Relaxing on Park Bench

என் தாய் எனை கொஞ்சிய பொழுதுகளை
என் சேயோடு நான் பாட காத்திருக்கிறேன்

எந்தை என்னோடு விளையாடி காலங்களை
உன்னோடு நம் சேய் களிக்க காத்திருக்கிறேன்

பிஞ்சிக் கைகளை முத்தம் கொடுக்க
குட்டிக் கால்களை தொட்டு பார்க்க
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
மாற்றான் சேயாதலால் மாற்று குறைந்தவள் நானல்லவா !!!

childhand

என்னுள் என் சேய் உருள்வதை உணரும் நன்னாள்
எந்நாள் என இந்நாள் வரையில் என்னால் இயன்றவரை
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

 

தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா

June 6, 2018

மீனும் நானும்

மீனும்🐟 நானும்🧑 இயல்பை மீறி உனை நோக்கி ஈர்க்கப் பட்டோம்🏄‍♂, நிலவோடு நிழலாடிடும்🌛 ஆற்றங்கரையை உன் மேனியால்👸 நீ ஆற்கொண்ட போது…! ✨

March 7, 2018

உதயமான நாள்

இனிமை பொங்க
பசுமை வளர்த்து
தன்மை உயர
தாயகம் உயர்த்தும்
பெண்ணியமே

எண்ணங்களை திண்ணமாக நிறைவேற்றி,
வண்ணங்களை வாழ்வுகளுக்கு
பகிர்ந்தளிக்கும்
பெண்ணினமே,

எழில் தரும் சூரியனே
தளிர் விடும் பொன் மலரே
தடாகத்தின் தாமரையே
பூவுலகில் பூமகளே

உனக்கு
உதயமான நல்வாழ்த்துக்கள்