Category

Ever Be Happy

December 3, 2010

நீதி , கதை…

விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .

அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலல் திட்டினான் .

விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட  பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..

சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் தான் எறிந்திருப்பான்  என  உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன்  உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .

வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க  ” அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது” என ஆங்கிலத்தில் கூறினார் .

–__–__–__–__–__–__–__–__–__–
ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?”.
அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”.

“சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான்.
இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?” என்றான்.
அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்?”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா?.
 –__–__–__–__–__–__–__–__–__–

இரு கதைகள் அனைவரும் அறிந்ததே என்றாலும் நான் படித்தது
இங்கேயும் , இங்கேயும் தான்.

என்றும் அன்புடன் நான், உங்கள் நண்பன்

November 13, 2010

How does a Capacitor block DC ?

இது தாங்க உண்மை. ஆனா இப்படி எழுதினா மார்க் போட  மாட்டேன்குறாங்க…

நீங்க தான் பார்த்துட்டு ஒரு தீர்ப்பு சொல்லணும்…

என்ன நாட்டாமை, தீர்ப்புக்கு ரெடியா…

November 3, 2010

நாகரீகம்…

முதல் தேதி [1955] என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சி நான் ரசித்த காட்சிகளில் ஒன்று.

1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

[vimeo http://www.vimeo.com/16404048 w=400&h=300]

அந்த காலத்துல இருந்து இப்ப வர நாகரீகம் மாறுவது(உடையில் மட்டும்) இதோ உங்களுக்காக:

உபயம் :   இங்கே   ,   இங்கே   மற்றும்   இங்கே

இதெல்லாம் டூப்பு. 2010 தான் டாப்பு.

அட, தூ…

எக்ஸ்ட்ரா:

முதல் தேதி படத்தில் இருந்து எனக்கு பிடித்த மற்றுமொரு காமெடி.

[vimeo http://www.vimeo.com/16400590 w=400&h=300]

என்றும் அன்புடன் ,
—-உங்கள் நண்பன்…

October 25, 2010

நெனச்சது ஒன்னு , நடந்தது ??? – (18+)

18 + னு போட்டதுக்காகவே பதிவை படிக்குற பல பேரு இருக்குற நாடுங்க இது. ஆனா இந்த வீடியோக்கள் நம்ம நாட்டுலதான் 18+…

சரி நாம விசயத்துக்கு வருவோம்.

முதல்ல இந்த வீடியோவை பாருங்க ,மற்றதை பிறகு பேசிக்கலாம்.

[vimeo http://www.vimeo.com/16167816 w=400&h=300]

இதுல இருக்குற பயபுள்ள நெனச்சது ஒன்னு , ஆனா நடந்தது ???

சரி அத விடுங்க.  இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க.

[youtube http://www.youtube.com/watch?v=Hpml_p18pxc&hl=en&fs=1]

இது தான் அதிர்ஷ்டம் வந்தால் அர்த்தராத்திரியில் ஹி ஹி ஹி …

August 1, 2010

சொர்க்கம் கண்டவன்…

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

 

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா…

 நன்றி