Category

Ever Be Happy

October 7, 2012

பெண்ணின் பெருமை

மாதராய் இவ்வுலகில் பிறந்திட

மாதவம் செய்திட வேண்டும்

பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.

 

பெண்ணுக்கு நிகர்

பெண்ணே அன்றி

இவ்வுலகில் எவருமிலர் !

Mother Love_1

என் தாயே,

மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய்

உனை அன்னையாய் பெற மாதவம் நான் செய்தேன்

 

கருவுற்ற காலம் முதல்

உருபெற்ற காலம் வரை

உன் வயிற்றில் எனை சுமந்தாய்

 

தரை தொட்ட காலம் முதல்

நடை கொண்ட காலம் வரை

உன் இடுப்பில் இடம் தந்தாய்

 

நான் பிறக்கும் முன்பே

என் மீது காதல் கொண்டவள் நீ !

நான் இறக்கும் வரை

அதை மறக்கவே மாட்டேன் !

Mother Love_2

தாயே,

பெண்ணை பெருமை என்று சொல்ல நீயே ஒரு சாட்சி !

 

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

 

பெண்ணின் கனிவு இன்றி

உலகுக்கு உருளகூட தெரியாது!

பெண்கள், உலகின் கண்கள் என்ற வர்ணிப்பு

வெறும் வார்த்தையில்லை

நியதி !

 

காலங்கள் கரைந்தோடினாலும்

பெண்ணின் பெருமை உலகில் பொறிக்கப்படும்

முத்து மகுடங்கள் !

Mother Love_4

தாய்மையின் பிறப்பிடமே பெண்தான்

தயவின் தாயகம் பெண்தான்

 

நீரின்றி அமையாது உலகு

ஆம்,

நீரின் நவரசங்களையும் கொண்டவள் பெண் மட்டும் தான்

நீரின்றி அமையாது உலகு !

 

பெண் தெய்வங்களை வழிபடும் நம் பண்பாடு

வெண் நிலவில் வரும் தேய்மானம் என

கண் இன்றி பல கயவர்கள் கத்தினாலும்

விண் உலகமே வியக்கும்படி

தன் முனைப்புடனே முன்னேறும்

பெண் இன்றி அமையாது உலகு !

 

ஆயிரம் சூரியனின் வெளிச்சம் கொண்டவள் பெண்.

 

பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிரும்

பெண்ணின் பெருமையை

உலகே வியக்கும்படி எடுத்துரைக்கும்

ஒரு எடுத்துகாட்டு தான்…

Mother Love_3

பெண் இன்றி அமையாது உலகு !

பெண் இன்றி அமையாது உலகு !

பெண் இன்றி அமையாது உலகு !

This work is licensed under a Creative Commons license.

September 13, 2012

பழனி-திருப்பதி

தொடர்ந்து இரு மொட்டைகள் போட்டதை நினைவுகூறும் வகையில் மொட்டை தலையுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

1. பழனி ஆண்டவனுக்கு. (ஏப்ரல் 14, 2012)

மொட்டை போட்டபின் மொத்த படியையும் நடந்தே கடந்து சென்றோம் நானும் என் நண்பன் தங்கபாண்டியனும். எல்லா படியையும் கடந்து “அப்பாடா முடிஞ்சிபோச்சிடா” என்று புலம்பியபடி போய் உக்கார்ந்ததை நண்பன் உலகத்துக்கு காட்ட எடுத்தது தான் இது. அப்புறம் இவன்தான் தங்கபாண்டியன்.

WiNnY-0062ThangaPandi

பழனி ஆண்டவரின் ராஜஅலங்காரத்தை பார்த்த கையோடு இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள்…

WiNnY-0069

WiNnY-0068

( கையில் இருப்பது பஞ்சாமிர்தம் , யாருக்காவது வேணுமா , ஹி ஹி ஹி… )

WiNnY-0078WiNnY-0079

அடுத்து,

2. திருப்பதி ஏழுமலையானுக்கு. (செப்டம்பர் 8 – 9, 2012)

செப்டம்பர் 8”ம் தேதி மதியம் ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி 10”ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கே வந்தடைந்தேன்.

நானும் என் நண்பர்கள் நால்வரும் சென்றோம். கீழ் திருப்பதி சென்றடையவும் பவர் இன்று மொபைல் மயக்கமானது. ஆகவே ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை.

நாலாயிரம் படிகளை பாதங்களால் 3:30 மணி நேரத்தில் கடந்து சென்று, முடியை காணிக்கையாக்கிட டோக்கன் வாங்க வேண்டும், ஆனவே டோக்கன் வாங்க 4:00 மணி நேரம். முடிக்கு முழுக்கு போட ஒரு மணி நேரம்.

வெங்கடேஷ்வரரை காண காத்திருப்பு 7 மணி நேரம். எல்லாம் முடித்து லட்டு வாங்க ஒரு மணி நேரம்…

பின்பு,

பாபநாசம் சென்று அங்கே ஒரு ஸ்டுடியோவில் ஒரு புகைப்படம். பின்பு ஊருக்கு திரும்பும் படலம்…

Boobalan,Rajesh VR,Yathursan,Rajesh M

போட்டோவில் இருப்பது பூபாலன், ராஜேஷ் VR, யதுர்சன், ராஜேஷ் M.

This work is licensed under a Creative Commons license.

August 29, 2012

தனித்தன்மையான குறும்படங்கள்

நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.

ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.

பாருங்கள், ரசியுங்கள்…

உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…

 

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

[youtube=http://www.youtube.com/watch?v=-6CnoKiD9NE]

 

தர்மம்

[youtube=http://www.youtube.com/watch?v=oPZTjdzS1-s]

 

பண்ணையாரும் பத்மினியும்

[youtube=http://www.youtube.com/watch?v=wy6hPKtf1NI]

 

மீண்டும் சந்திக்கலாம்.

என்றும் தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

December 25, 2011

டோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 2

டோரென்டில் உள்ள வில்லங்கம் என்ன என்பதை :: இங்கே :: தெரிந்திருப்பீர்கள். அதில்  இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.

µTorrent”க்கான  வழிமுறை இங்கே தமிழில்,

1. உங்கள் டோரென்டில் Options > Preferences > Advanced என சென்று ipfilter.enable என்பதை கண்டுபிடித்து TRUE என கொடுத்து OK’வும் கொடுக்கவும்.

2.  Start >> Run என சென்று %AppData% என கொடுத்து OK கொடுத்து, uTorrent க்குள் செல்லவும்.

3. அங்கே ipfilter.dat என்ற ஃபைல் இருக்கிறதா என பாருங்கள், இல்லையேல் நீங்கள் இன்னும் வில்லங்கத்தில் தான் இருகிறீர்கள் என அர்த்தம். அப்படியே ஃபைல் இருந்தாலும் அதை அப்டேட் செய்யவில்லை என்றாலும் வில்லங்கமே.

4. அப்புறம் :: இங்கே :: கிளிக்கி ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

5.  உள்ளே இருக்கும் ipfilter_setup.exe’ஐ நிறுவவும். தற்போது உங்கள் Desktop”ல் உள்ள ShortCut”ஐ திறக்கவும்.

6. அதன் Option”ல் “use a custom blocklist from a differnt URL (set Url below)” என்பதை தேர்வு செய்து http://list.iblocklist.com/?list=bt_level1&fileformat=p2p&archiveformat=gz என்பதை கீழே உள்ள பெட்டியில் கொடுங்கள்.
ஆனால் பிற்பாடு நீங்கள் அப்டேட் செய்ய http://www.iblocklist.com/lists.php என்ற முகவரியில் கிடைக்கும் IPBlock List”ஐ கீழே தோன்றும் பெட்டியில் கொடுக்கவும்.

7. மற்றவைகளை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்.

8. உங்கள் டோரென்டை RESTART செய்யவும்.

நீங்கள் செய்தது சரிதானா என்பதை அறிய µTorrent”னுள் Logger Tab”ல் “Loaded ipfilter.dat (222534 entries)” என்று இருக்க வேண்டும்.

 

இங்கே 222534 IP’s Filter செய்யப்பட்டுள்ளது.

µTorrent”க்கான  வழிமுறை போல சில வழிமுறைகள் கீழே :

நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை அப்டேட் செய்யுங்கள்..

:: உபயம் ::

1. http://ipfilterupdater.sourceforge.net/
2. http://www.davidmoore.info/ipfilter-updater/
3. http://www.davidmoore.info/2009/05/27/set-up-ip-filtering-in-utorrent-and-keep-your-ipfilterdat-up-to-date-easily/
4. http://thepiratebay.org/torrent/6903759/ipfilter.dat


தீராத நட்புடன் ,

திருநெல்வேலி காரன்…

…ஒவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான்…

December 25, 2011

டோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 1

தற்போது டோரன்ட் மூலம் திரைப்படங்கள், மென்பொருட்கள் ஆகியவை தரவிறக்கம் செய்வது வழக்கமாகி விட்டது.

இருந்தாலும் சிலர் ரொம்ப மெதுவாக டவுன்லோட் ஆகுது, படம் ஓட மாட்டேங்குது, Windows Media Player ஓபன் ஆகுது என புலம்புவதுண்டு (என்னை போல).

அதற்கான காரணம் என்னவென்றால் ,

நாம் உபயோகிக்கும் டோரென்ட் மென்பொருள்தான்.  

µTorrent , Halite, BitSpirit, Vuze, BitTorrent.

இவைகளின் வேலை எங்கெங்கெல்லாம் நாம் தரவிறக்கம் செய்யும் தரவு இருக்கிறதோ அதையெல்லாம் இணைத்து நம்முடைய கணினிக்கு அவர்களிடம் இருந்து கொண்டு வருவது தான்.

இதில்  என்ன பிரச்சனை என்றால்,

நாம்  தரவிறக்கும் தரவு நிச்சயம் பொதுவுடைமையானது இல்லை என்பதே.

ஆம். நாம் தரவிறக்கம் செய்வதையோ , தரவிறக்கிய (புதிய திரைபடங்கள், திரைப்பாடல்கள், மென்பொருட்கள்) தரவு உங்கள் கணினியில் அல்லது கையில் இருந்தாலோ அது  சட்டப்படி குற்றம்.

————————- IF YOU WANNA READ TECH ONLY JUST SKIP IT ————————–

இதுல ஒரு காமெடி என்னன்னா சென்னை பாரிஸ் கார்னர் பக்கத்துல ஒரு  சிடி கடைல நான் புளுரேவை பொறுக்கிகொண்டு இருக்கும்போது ஒரு சுமோவில் ஆஜானுபாகுவான இரு ஆணும் ஒரு பெண்ணும் (மப்டி போலீஸ்) வந்து புதுபட சிடி இருக்கான்னு தேடுறாங்க., அந்த வரிசைல இருக்குற பல கடைகள்ல நான் நின்ற கடையையும் சேர்த்து மூன்று கடைகளை பார்த்துவிட்டு ஒன்னும் கிடைக்காம போய்டாங்க.

அவிங்க வர்றதுக்கு கால்மணி நேரத்துக்கு முன்னால ரெய்டு வர போறதா தகவல் வந்து எல்லா சிடியையும் கடை பெட்டிக்கு கிழே மறைத்து வைத்தனர். ரெய்டு நடக்கும் போது என் கையில் சில ஆங்கில படங்கள் இருந்தது. வந்தவர் புதுபடம் ஏதுமில்லை என்று திரும்பியதும் கடைக்காரரிடம் நான் கேட்டேன், இந்த ஆங்கிலபடங்களை விற்க தடைஇல்லையா என.

இதெல்லாம் அளவ்டு தான் தம்பி , புதுபடம் தான் நாட் அளவ்டு என்றார். அப்படியே யார் பிடிபட்டாலும் வரிசையா இருக்குற கடைகள்ல யார் கடைசியா ஃபைன் கட்டினாங்களோ அவங்களுக்கு அடுத்த கடைகாரர் தான் தற்போது ஃபைன் கட்டுவார். # என்னாவொரு நாணயம்

இதுல இருந்து சொல்ல வர்றது என்னன்னா, அனுமதி இல்லாமல் விற்கப்படும் அனைத்துமே தண்டனைகுரியது தான். நான் அன்று கையில் வைத்திருந்த ஆங்கில படங்களும், நாம் நம் கணினியிலும் மொபைலிலும் கேட்கும் திரைபாடல்களும் இதில் அடக்கம். ஆனால் நம்மை அடக்க யாராலும் முடியாது என்பதே இந்த பதிவின் சாராம்சம்.

————————- NON TECH AREA END ————————–

அனுமதி இன்றி மக்கள் தரவிறக்கம் செய்வதையும் எங்கோ இருந்து கொண்டு தரவேற்றம் செய்பவர்களையும் தடுக்கவே முடியாது.
அப்படி முடியாமல் RIAA, MPAA போன்ற அமைப்புகள் செய்யும் குறுக்குவழி தான் இவைகள்,
1. போலியான தரவுகளை இணையத்தில் நடமாட விடுதல்
2. தரம் குறைந்த தரவுகளை நல்ல தரவு என கருத்து தெரிவித்தல்.
3. பொய்யான PEER”கள் மூலம் தவறான , தரகுறைவான தரவுகளுக்கு SEED செய்தல்
4. இத்தனைக்கும் மேலாக உங்கள் Bandwidth’ஐ மெதுவாக்கி, உங்கள் தரவிரக்கத்தை மெதுவாக்குவதே அவர்களின் நோக்கம்.
இதுபோன்று செய்வதால் கொஞ்சமாவது தரவு மாற்றத்தை தடுக்கலாமே என்பது மட்டும் அவர்கள் எண்ணம் அல்ல, தவறான அவர்களது தரவுக்கு SEED செய்யும் உங்கள் IP எண்களை கண்டறிந்து உங்கள் ISP மூலம் உங்களது அனைத்து தரவு மாற்றத்தையும் கண்காணிக்கவும் செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ?
நம்பியே ஆக வேண்டும்.
மேலும் நல்ல தரவுகளை PEER செய்பவர் போல்வந்து அங்கே SEED செய்பவர்களை
(அது நீங்களாய் இருந்தாலும்) கண்காணிக்கும் வேலை செய்பவர்கள் தான் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சப்தமே இல்லாமல் பல நாடுகள் உடந்தை.
நம் நாடும் இந்த அமைப்பில் பங்கு வகிக்கிறது. கபில்சிபிலை கிண்டல் செய்யும் நம்மில் பலருக்கு இது தெரியாது.
இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ::  இங்கே :: கிளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.