Category

Ever Be Happy

June 9, 2017

​சாதி எப்படி வந்தது?

சாதியின் பரிணாமம்!!

மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர். தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது. 
ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள். 

Potter குயவர் 

Hunter வேட்டையாடி

Mason கட்டட பணியாளர்

Fisher/Fischer/Fischer மீனவர்

Smith கொல்லர்

Sangster பாடகர்

Master ஆசான்

Jardine(garden)தோட்ட கலைஞர்

Taylor தையலர்

Shepherd மேய்ப்பர்

இப்படி இன்னும் ஏராளம்.
சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும். கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். 

Wang (king) அரசர்

Lau (han dynasty) அன் அரசாட்சி

Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்

Thong (tang dynasty ) தாங் அரசாட்சி

Fu (teacher ) ஆசிரியர்

இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறைசாற்றுகிறார்கள். 
சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது. 
அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது. 

ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.
கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.
வரலாற்று ஆய்வாலர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.
பின் எப்படி சாதி இழிவானது??

அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.

மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது. ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர். 

சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.

புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர். கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர். 

இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர். 

சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.

தீர்வு தான் என்ன??

அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள். 
சாதி தேவை தானா??

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர். கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.

தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது. 
சாதிய இழிவு அறியாமை!!

ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.

இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.

ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..

மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை  ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது!!

நிறைவாக என் அய்யன் பாரதியின் வரிகளோடு, 

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலும் தெளிவுற : இங்கே

May 16, 2017

உறவுகள் !!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன்.

சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் – சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான் ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
– நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ – இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ’ என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே’ என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

February 4, 2017

Where is your Focus? 

​The pregnant deer – A beautiful management story

In a forest, a pregnant deer is about to give birth.

She finds a remote grass field near a strong-flowing river.

This seems a safe place.

Suddenly labour pains begin.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.

She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.

To her right, she spots a hungry lion approaching her.

What can the pregnant deer do?

She is in labour!

What will happen?

Will the deer survive?

Will she give birth to a fawn?

Will the fawn survive?

Or will everything be burnt by the forest fire?

Will she perish to the hunters’ arrow?

Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

What does she do?

She focuses on giving birth to a new life.
The sequence of events that follows are:

– Lightning strikes & blinds the hunter.

– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion. 

– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.

– The deer gives birth to a healthy fawn.

In our life / business too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.

Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.

The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

Ask yourself,
Where is your focus?

Focus should always remain on faith and hope!!! 

Be Focus… And WiN the Race!!!  👌 👍

October 27, 2016

Be a LION

​In the jungle which animal is the biggest ……..

I heard you say, Elephant.
In the jungle which animal is the tallest ……..

I heard you say, Giraffe.
In the jungle which animal is the wisest ……..

I heard you say, Fox.
In the jungle which animal is the fastest …….. 

I heard you say, Cheetahs.
Among all these wonderful qualities mentioned, where is the Lion in the picture.?
Yet, you say the Lion is the KING of the jungle even without ANY of these qualities. 
Why??
Because, 
The Lion is courageous, the Lion is very bold, the Lion is always ready to face any challenges, any barrier that crosses his part, no matter how big they are.

 The Lion walks with confidence. The Lion dares anything and is never afraid. The Lion believes he is unstoppable. The Lion is a risk taker. The Lion believes any animal is food for him. The Lion believes any opportunity is worth giving a try and never allows it slip from his hands. The Lion has charisma.

So
– What is it that we get to learn from the Lion .
• You don’t need to be the fastest.

• You don’t need to be the wisest. 

• You don’t need to be the smartest.

• You don’t need to be the most brilliant.

• You don’t need to be generally accepted to become your dreams and be great in life.
• All you need is courage.

• All you need is boldness. 

• All you need is the will to try.

• All you need is the faith to believe it is possible.

• All you need is to believe in yourself that you can do it.
It’s TIME to bring out The Lion in you. 

https://youtu.be/sWlXsEj1RpM

October 12, 2016

வாழ்க்கை குறுகியது;அழகானது;ஆழமானது…

​தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

“ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக….

இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???” என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். 

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்…..

“ஏம்பா நீ சைலண்டா இருக்க……”

‘நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்’

“எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?”

‘இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க…’

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

‘ உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்… நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது’.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

‘வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா

புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.’

‘நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்’ னு  அர்த்தம்.

‘முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க’ னு அர்த்தம்.

‘நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்’.

பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

‘”யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???”‘

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ‘ அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாம் கழிச்சிருக்கோம்’.

#வாழ்க்கை குறுகியது, #அழகானது,

#ஆழமானது…