Category

College Life

September 7, 2012

திருச்செந்தூர் பயணம்

பழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன்.

பழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது.

ஜான், நான்(பூபாலன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம்.

ஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.

Nice (1)Nice (2)

ஜானும் நானும் நாசரேத் சென்று அங்கே ஜானின் அலுவலத்தில்(WI5 இணைய வழங்குனர்) கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு பின் திருச்செந்தூர் சென்றோம்.

நாங்கள் இருவரும் செல்லும் முன் அங்கே மற்றவர்கள் சென்று இருந்ததால் கிட்டதட்ட முப்பது முறைக்கும் மேலாக எங்கே இருக்கிறீங்கள் என்று கேட்டுகொண்டு இருந்தனர்.

Nice (6)Nice (7)Nice (5)

Nice (8)

பின்பு கொஞ்சநேர கடற்கரை உலாவுக்கு பின் டல்ஹௌசியும் வைரவனும் கடலின் அலைகளோடு மூழ்கி எழுந்தனர்.

Nice (16)

அதற்குள் ஜான் “வீட்டுக்கு போகணும், அப்பா அடிப்பாங்க” என்று கெஞ்சினான். “சரி, பத்திரமா போய்ட்டு வா” என வழியனுப்பி வைத்தோம்.

Nice (18)Nice (10)

அதன்பின் டல்ஹௌசி,வைரவன் முருகனை சந்தித்து வந்தனர். இருவரும் வரும்முன் நாங்கள் மூவரும் சில கடைகளுக்கும் புகுந்து வேட்டை ஆடினோம்.

Nice (22)Nice (24)Nice (28)

ஐவரும் சந்திக்கும் போது மாலைமலர் செய்திதாள் படித்துகொண்டு இருந்தனர் அங்கு சிலர். தற்போது இரு பைக் மட்டுமே உள்ளது. ஆனால் ஐந்து பேர்…

இருந்தாலும் திசையன்விளை வந்து சேர்ந்துவிட்டோம். வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது நம்ம ஜான் ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கல. அதான் கல்லூரிவிழாவில் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு காட்சியில் பில்லா-வாக ஜான்…

DSC_1759

வலப்பக்கம் பில்லாவை மிரட்டுபவர் போலீஸ் ஆபீசர் டக்டீஸ் (எ) டல்ஹௌசி பிரபு.

மதியநேரத்தில் கொம்மடிகோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரும்போது குலசை பாதையையும், மாலைநேரத்தில் உடன்குடி பாதையையும் உபயோகித்தால் காவலர்களுக்கு தண்டம் கட்ட தேவை இருக்காது.

(திருச்செந்தூர் பலமுறை சென்றிருந்தாலும் இந்தமுறை பெற்ற அனுபவம் இதுதான்)…

This work is licensed under a Creative Commons license.

August 25, 2012

Alumni Meeting – 2012

வணக்கம் நண்பர்களே,

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15”ம் தேதி கொம்மடிகொட்டை கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழும். அங்கே எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன்.

Alumni2012 (2)

Alumni2012 (3)Alumni2012 (4)

Alumni2012 (5)Alumni2012 (8)

Alumni2012 (6)Alumni2012 (7)Alumni2012 (15)

Alumni2012 (14)

Alumni2012 (10)Alumni2012 (11)

Alumni2012 (12)Alumni2012 (13)

Alumni2012 (1)

பழைய மாணவர்கள் சந்திப்பை முடித்துவிட்டு திருச்செந்தூர் சென்று வந்தோம். அடுத்த பதிவில் அந்த புகைப்படங்களை காணலாம்…

This work is licensed under a Creative Commons license.

July 19, 2012

Alumni – 2012

வணக்கம் நண்பர்களே,

பழைய மாணவர்கள் சந்திப்புக்காக வரும் ஆகஸ்ட் மாதம் 15”ம் நாள் நம் கல்லூரிக்கு வருமாறு SJSC மாணவர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

Banner1

Banner2

நண்பர்களே ஆகஸ்ட் 15”ல் நம் கல்லூரியில் சந்திப்போம்…

This work is licensed under a Creative Commons license.

September 5, 2011

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை.

ஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை.

கற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும் நம்மிடமும் பல விஷயங்கள் இருக்கிறது.

கல்லூரி ஆசிரியர்கள் நம் நினைவில் இருந்து மறைவது கடினம். ஆம், நம் ஆட்டம் பாட்டம் அறிந்த ஆசிரியர், கனவை பகிர்ந்து கொள்ள , நினைவை பங்கு கொள்ள, நம் நடிப்பை பார்த்து சிரிக்க, நாம் விடும் கதைகளை நம்பியதை கூறி நமக்கு திருப்தி கொடுத்த, நட்பின் பிரிவை இணைக்க என பலவிதமான ஆசிரியர்கள்…

ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான பாணியை கொண்டு கற்பித்தார்கள்.

இன்னும் கற்பிக்கிறார்கள்…

கல்லூரி என்றாலே நினைவில் வரும் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் மகேஷ்குமார், கருப்பசாமி, மகேஸ்வரி, ஜெயகலா, சுமதி, முத்து குமாரி,  சுகுணா,அமுதா, ஜாஸ்மின், சித்திரைகுமார், ராஜா ராம், பாலகிருஷ்ணன், வைட்டன் ஆகியோர். இவர்கள் மற்றுமின்றி இன்னும் இருகிறார்கள். சிலர் வகுப்பு வந்து பாடம் எடுக்கவில்லை என்றாலும் மனதில் மறக்க  முடியாத இடம் பிடித்தவர்கள்…

ஆசிரியர்கள் என்ற சொல்லுக்கு நண்பர்கள் என்ற பொருளை தந்த ஆசிரியர்

கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் இதயம் கனிந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…

August 22, 2011

பழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

 

இது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு

அவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற

முயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள்

சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

DC (40)

அசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சரியாக 10.15 க்கு கல்லூரி வாசலை அடைந்ததும் அங்கே வரவேற்றது இசக்கிமுத்து, ஜான், வைரவன், சுப்பையா, ராம்குமார் மற்றும் சில தோழிகள்.

DC (14)

ஜானுடன் நமக்கு நன்கு பரிச்சயமான பிரகாஷ் வந்திருந்தான்.

DC (9)

எங்கள் அண்ணன் வீர சிங்கம் சிவராம் அவர்களும் அவருடன் அலிஸ்டர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். மேலும் ஜெயதீபன், கண்ணன், விஜயகுமார், சுரேஷ், ஆல்வின் , ராம்குமார் ஆகியோரும் இன்னும் பலரும் வந்திருந்தனர்.

DC (42)

ஒரு வருடமே நம் கல்லூரியில் படிந்து பின் பொறியியல் படிக்க சென்ற அமுதா, அவளது தோழி ராஜி மற்றும் எங்களுக்கு பரிச்சயம் இல்லாத தற்போது முடித்தவர்கள் சிலரும் வருகை தந்திருந்தார்கள்.

DC (23)

சின்ன தங்கம், ராணி ராம்பாலா , பிரவீன் குமரன், ஜெய சந்திரன், மெய்கண்டன், அசோக் லிங்கம் இன்னும் சிலர் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அடுத்தவருடம் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுகொள்கிறேன்.

கல்லூரி வாசலை கிடந்து உள்ளே சென்றதும் எங்களை வரவேற்றார் கணிபொறி தலைமை ஆசிரியர் கருப்பசாமி அவர்கள்.

DC (5)

அவரை தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியர் சித்திரைகுமார் , தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன், மற்றும் வணிகவியல் ஆசிரியர் வைட்டன்( Whittan ) ஆகியோரை சந்தித்தோம்.

three

இவர்களை தொடர்ந்து ஆசிரியை ஜெஸ்மின், சுகுணா, ப்ரியா மற்றும் தீபா ஆகியோர்களை சந்தித்த பின் ,

mam

எங்கள் சிங்கம், தங்க தலைவர், ஆசிரியர் மகேஷ்குமார் அவர்களை சந்தித்தோம்.

mahesh

சற்று நேரத்தில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆனது. ( பெருசா ஒன்னும் இல்லீங்கோ). ஒரு பந்தை ஒன் பிச்ல போட்டு கொஞ்ச தூரத்துல நட்டி வைச்சிருகுற ஒற்றை ஸ்டெம்ப்ல அடிக்கணும். ஒருத்தருக்கு மூணு சான்ஸ். இந்த வீர விளையாட்டை விளையாடி முதல் பரிசை தட்டி சென்றவர் : இசக்கி முத்து அவர்கள்.

DC (18)

இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : “ நான் இதுக்காக தனியா ஏதும் ப்ராக்டிஸ் பண்ணல. பட் நொவ் என்னால இத நம்பவே முடியல

இவர் இப்படி கூறவும் அருகில் இருந்து அண்ணன் அசோக் கூறியது, “ எங்களாலயும் தான் நம்ப முடியல

DM (37)

அடுத்ததாக போட்டியில் இரண்டாவது பரிசை தட்டிசென்றவர் சுப்பையா கணேஷ். அவரிடம் இது பற்றி கேட்டபோது :: “ நான் போலீசில் சேர்வதற்காக பல பயிற்சி செய்து வந்தேன். இப்போது போலீசில் சேரும் எண்ணத்தை கைவிட்டு விட்டாலும் நான் செய்த அபாரமான பயிற்சிகள் எனக்கு இந்த போட்டியில் ஜெயிக்க உதவி செய்தது.” என்றார்.

DC (19)

இவர் பேட்டியை கேட்டதும் அருகில் இருந்த யாரோ “ அப்படியே அறுவடை பண்ணிட்டாலும், ஆணியே புடுங்கவேணாம், முதல்ல கூட்டத்த கலைங்கப்பா ” என்ற சப்தம் இவர் காதில் விழவில்லை. அப்படி சொன்னது அனேகமா இவராதான் இருக்கும்னு சி.பி.ஐ சந்தேக படுறாங்க.

DC (43)

சரி அத விடுங்க,

பின்பு கொஞ்ச நேரம் கல்லூரியில் நாங்கள் படித்த அறைகளின் வாசத்தை சுவாசிக்க சென்றோம். ஒவ்வொரு வகுப்பும் இன்னும் தனக்கே உரித்தான அதே வாசத்தோடு இருந்தது.

அதன்பின் பழைய மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

கல்லூரி முதல்வர் நாகராஜ் , ஆசிரியர் மகேஷ்குமார் , கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

DC (17)

ஆசிரியை ஜாஸ்மின் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்.

DC (16)

அதை தொடர்ந்து முதல்வர் நாகராஜ் அவர்கள்பேசினார்.

DM (13)

பின்பு ஆசிரியர் கருப்பசாமி பேசினார். அதை தொடர்ந்து மகேஷ்குமார் அவர்கள் தன் உரையை நிகழ்த்தினார். அவர் கூட்டத்தில் இருந்து யாராவது பேச வாருங்களேன் என்றார். நம்ம ஆளுங்க தான் சும்மாவே இருக்க மாட்டாங்களே, என்னை பேச சொல்ல நான் சென்றேன். ( கொய்யால, எதுக்குடா நீ போன? அப்படின்னு மத்தவங்க கேக்குற அளவுக்கு உளறி கொட்டி காமெடி பண்ணினேன் )

DM (21)

நம்ம ஜெயதீபன் பேசினான். உண்மையை பேசினான். தோப்பில் தேங்காய் திருடியது முதல் உள்ள அனைத்தையும் என்னை விட நன்றாகவே உளறி கொட்டினான். அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “ பட் , உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு” என்று சொல்லும் வரை பேசினான்.

DC (20)

ஆனா பாசக்கார பய… நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்றதும் எனக்கு போன் செய்து  “அண்ணே, நாம எல்லா வருசமும் இப்படி மீட் பண்ணலாம்”  என்றான்.

நம் தோழி செல்வப்ரியா பேசினாள். ஆங்கில முன்னேற்றம், கல்லூரி வளாக நேர்காணல் பற்றி பேசினாள்.

DM (28)

பின்பு ஆசிரியர் மகேஷ்குமார் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் சில கவிதைகள், மேற்கோள்கள் என கலக்கினார். பேசும் போது தாருண்யம் சென்ற நிகழ்வுகளை தன்னால் மறக்க முடியாது என்றார். ஆம், எங்களாலும் மறக்க முடியாத இனிமை பொங்கும் பயணம் அது.

DM (35)

இவ்வாறாக பழைய மாணவர்கள் சந்திப்பு ஒரு காப்பி, ஒரு ஜாங்கிரி, ஒரு பப்ஸ், இரு பிஸ்கட்டுடனும் ராம்குமாரின்

DM (33)

நிறைவுறையுடனும் இனிதே நிறைவடைந்தது…

மேலும் புகைப்படங்களுக்கு mr.boobalaarunkumaran@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரையும் தொடர்பு தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்தவும். நட்புக்குள் என்றும் பிரிவே இல்லை. நண்பேன்டா …

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் உவரி சென்று கொண்டாடிய நிகழ்வை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

என்றும் தீராத நட்புடன்,

பூபால அருண் குமரன் . ரா