வணக்கம் நண்பர்களே , உங்களின் நட்பு எனக்கு கடவுள் கொடுத்த வரம் …
என் வாழ்க்கையின் பயணங்களில் நீங்களும் ஒரு பயணியாக பயணித்து கொண்டு இருப்பதற்கு நன்றி. பிறந்தது நாகர்கோயில். வளர்ந்தது திசையன்விளை என்ற சற்றே பெரிய கிராமம் (திருநேல்வேலி மாவட்டம் ). பிறந்தது முதல் வாழ்க்கை நன்றாக தான் போய்கொண்டு இருந்தது…
திடீர் என்று என்னை திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிகுலேஷன் அப்படிங்கற பள்ளிகூடத்துக்கு அனுப்பிட்டாங்க.மேலும் அது ஆங்கிலபள்ளியாதலால் என் பெற்றோர்களை மம்மி, டாடின்னு கூப்பிட்டுட்டேன்னு, தமிழ் ஆர்வம் காரணமாக (‘கட்’ பண்ணா வேலைய மாத்திட்டாங்க அப்படிங்கற மாதிரி) என்னை ஸ்ரீ இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள் … நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்…
அப்புறம் ஐந்து வருட உழைப்புக்கு பிறகு ஆறாம் வகுப்புக்கு போனேன் … நட்பு என்பது அங்கு தான் அறிமுகமானது … அப்புறம் ஒரு ஏழு வருடம், கதற கதற படித்து முடித்தேன். அப்பாடா, பள்ளிப் பயணங்களில் இனி பயணியாக இருக்க தேவை இல்லை என்று எண்ணுவதற்குள் , ரிசல்ட் என்றார்கள். அப்ளிக்கேசன் ஃபாம் என்றார்கள். அதற்குள் கொம்மடிகோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்தர சரஸ்வதி கல்லூரியை நோக்கி கால்கள் தன் பயணத்தை இனிதே ஆரம்பித்தது..
நட்பின் புதிய முகவரியை கல்லூரியில் தான் பெற்று கொண்டேன். “அடப்பாவிகளா, சீக்கிரம் காலசக்கரத்தை கண்டுபிடிங்கடா…கண்டுபிடிச்சி என்ன மூணு வருசத்துக்கு பின்னாடி இறக்கி விட்டுடுங்கடா” என்று புலம்பியபடி கல்லூரி படிப்பை முடித்தேன்…
முடித்தபின் சென்னை எனும் மாநகரம் தேடி வந்தேன். அப்படியே போகிற போக்கில் சென்னை பல்கலைகழகத்தில் மேற்படிப்பு ஒன்றை முடித்தேன். மாக்களோடு ஒரு மா போல இயந்திரத்தை விழுங்கியபடி வருங்காலம் தேடி ஓடியபடியும் இத்தளத்தில் நினைவுகளை பதித்தபடியும் உலகை வலம் வருகிறேன்.
மேலும் இந்த தளத்தின் அடிப்படை அறிய இங்கே சொடுக்கவும் மேலும் எனது பள்ளி வாழ்க்கையை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் மேலும் எனது கல்லூரி வாழ்வை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் நான் என்றும் நட்புக்கு மரியாதை கொடுக்கும் உங்கள் நண்பன்,
என்றும் தீராத நட்புடன்
பூபால அருண் குமரன். ரா
boobalaarun@gmail.com
(+91) 9488 – 357 – 573
FACEBOOK – TWITTER – INSTAGRAM – WHATSAPP
Once Again,
Always with Undying Friendship
Boobala Arun Kumaran. R
Leave a Reply