Author

Boobala Arun Kumaran R

I'm Just Like YOU...

April 11, 2010

சத்தம் இன்றி முடியும் ஒரு காதல் ஓவியம்





காதல் இல்லாத உலகத்தை அந்த கடவுள் நினைத்தாலும் இனி உருவாக்க முடியாது …
தினம் தினம் பல காதல் மலர்கிறது… பல காதல் உதிர்கிறது…


மனிதத்தையும் தாண்டிய காதல் இது. மனிதர் புரித்து கொள்ள இது மனித காதல் இல்லைதான் என்றாலும் நிச்சயம், அதையும் தாண்டிய புனித காதல் தான்.  Just Watch It…

[vimeo http://vimeo.com/23534546 w=400&h=300]

February 26, 2010

வலிகள்

:: நாள் : 26-02-2010 :: நேரம் : இரவு 7 மணி 40 நிமிடங்கள் ::

இதயத்தின் துடிப்புகள் துன்பத்தை

அடித்து உதைக்கும் சத்தம் தான் “லப் டப்”…

இதயத்தின் துடிப்புகள் இன்பத்தை

கொஞ்சி குலாவிடும் சத்தம் தான் “லப் டப்”…

எரித்து விடு

உன் துன்பத்தை !

அழைத்து வா

உன் இன்பத்தை !

கடிந்து விடு

உன் கஷ்டகாலத்தை !

விடிந்து விடும்

உன் இஷ்டநேரம் !

சிநேகிதியே ,

உன் கண்ணீருக்கு

சலங்கையிடு

அதன் சப்தங்களில்

உன் நடனம் அரங்கேறட்டும்.

 

விடியல்

உன் வாசலைத் தேடுகிறது

நீ ஏன் உறக்கம்

கலைக்க மறுக்கிறாய்.

நீ உறக்கம் கொள்ளும் போது

என் கருவிழிகள் உனக்காக !

நீ துன்பம் தொலைத்தபோது தான்

நான் இன்பம் கொண்டேன் !

உன்னால் தொலைக்கப்பட்ட உன் துன்பங்கள்

இனி உனக்கு உலகுக்கும் கிடைக்காமல் போக கடவது…

February 22, 2010

மெளனத்தின் பிடியிலிருந்து

::  நாள்  : 22-02-2010 :: நேரம் : இரவு 1 மணி ::

செல்லிடைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

மறுபக்கத்தில் ஒரு தோழமை. தோழமையின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் தன்னை மெளனத்தின் பிடியிலிருந்து விடுவித்தபடி என் செவியறைகளுக்குள் அடைக்கலம் புகுந்தது.

சில கண்ணீர்த்துளிகள் வார்த்தைகளை சிறை பிடித்து மீண்டும் மெளனத்திற்கு அடிமையாக்கியது.

பல நோக்கத்தோடு வந்த அந்த அழைப்பு சில துளிகளால் பரிதவித்து பாதியிலேயே மரிந்துவிட்டது.

அழைப்பு, துண்டிப்பு ஆனபோது எனக்கு புரிந்துவிட்டது. வலிகளை விவரிக்க வழிகளே இல்லை என்று.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

கனவுகளை கலைத்துவிட்டு
கண்ணுக்கு மருந்திடும் சமுதாயம் ;

மருந்து கண்ணுக்கு இல்லை
தன்னை பார்க்காமலிருக்க
கண்ணுக்கு சமுதாயமிடும் சுத்த நாடகம்.

அந்த நாடகம் இருபுறமும் அரங்கேறி இருந்தாலும்
முடிவு ஓர் உன்னதமாய் இருக்க இல்லாத இறைவனை வேண்டுகிறேன்.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

இல்லாத இறைவா,

யாரையும் ,
மண்ணுக்கு கண்ணீர்துளிகளை தானம் செய்ய வைத்து
வழிநெடுக துன்பங்களை தூக்கவைத்து
உலகை வெறுக்க வைத்து விடாதே…

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

எங்களிடம்
காலம் மோதுகிறது
நிச்சயம் காலத்துக்கு கடிவாளம் இட்டு
எங்கள் வீட்டு குட்டிப் பாத்திரத்தில்
அடைத்து வைத்திருப்போம்.
அப்போது காலம் அழுது புலம்பி கேட்கும்
மரண சம்பவத்திற்கு மன்னிப்பை !

— என் டைரியில் இருந்து…

இப்படிக்கு

என்றும் தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்…

October 11, 2007

இளைஞர் கலைவிழா விபரீதம்

::  நாள்  : 11-10-2007   ::   நேரம் : இரவு 10 மணி  ::

நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால் இன்றோ…

சில விபரீத விளைவுகள்.தோழி அமுதாவின் கையில் விபத்து.

உயிர்வலியின் கண்ணீர் இன்று என் கனவிலும் வரும். என் கண்கள் உறங்கவும் மறுக்கிறது.

உறங்கவில்லையென்றால் நினைவுகள் நெருடுகிறதே என உறங்கவும் ஏங்குகிறது.

உறங்காத போது ஏதோ முயல்வோம் என்று கவிதை எழுதுவதுண்டு. ஆனால் உண்மையாகவே என் வருத்தத்தின் அறிவிப்பு பலகையில் இடுவதைப் போலவே எழுதுகிறேன் இன்று.

இறைவனை
ஒரு போதும் நம்பாதீர்கள்
முற்பிறவியென்று கூறி
மூன்றாம்  பிறைக்கு பிறகு
அமாவாசைக்கு ஆசைப் படுகிறான்.

விடியும் வரை விளக்கு

ஒளி விடட்டும்

விட்டுவிட மறுக்கிறது காற்று !

விடிந்த பின்னே கொண்டாட்டம்

விடியலே இங்கே சந்தேகம் !

தேவையற்ற வினைகளுக்காக

விளையாடினோம்

வந்தது  விபரீதம்…

எங்களில் ஒருவருக்கென்றால்

ஏக்கங்கள் மிஞ்சும்

எவருக்கோ என்று ஆகும் போது

வலியின் ரணம் நெஞ்சையழிக்கிறது !

அவள் கண்ணீர்

என் கண்ணிற்குள்

அவள் ரணம்

என் நெஞ்சுக்குள்

அந்த இறைவன்

என் வெளியறையில்;

ரணத்தின் வலிநிவாரணம்

என் மனதின் உள்ளறையில்;

தவறு என்னுடையதோ
இல்லை அவளுடையதோ

காயம் ஏன் கடவுளே,
நீயில்லையென நான்
எண்ணும்போது
நிரூபிகிறாய்
நீ இல்லாததை !

கர்மபலன்

வீணான  வார்த்தை

கர்மம்

வேண்டாத வார்த்தை

மனிப்பதாலோ ; கேட்பதாலோ
மனங்கள் மலருவதில்லை.
காயங்கள் மறைவதுமில்லை.

வருந்துகிறேன்  ..சீக்கிரம் நிலை பெற

நிம்மதியை நாட வாழ்த்துகிறேன்.

அமுதாவின் தோழி ராஜி என்னை முறைத்தபடி சென்றது குறித்து,

நட்புக்காக
நலத்தோடு சிறு வெடிப்பு
பேச மறுத்தது
என் வெறுப்பல்ல,
என் தவறு…

இது தான் நல்லதோர் நட்பு…

வாழ்கவளமுடன்

::  நாள்  : 12-10-2007   ::   நேரம் : இரவு ::

நேற்றைய சம்பவத்திற்கு முடிவு வந்தது. மன நிறைவு அடைந்தது.
மன்னிப்பு கேட்டேன். தேவையில்லாதது தான்.

வலியிருக்கிறது
காயம் பட்ட என் மனதிலும் !

நடந்தது மறக்கப் படட்டும்
இனி
நடக்காமல் இருந்து விடட்டும் !

புன்னகைக்கு விலையேது ?
உண்மை நட்பிற்கும் விலையேது ?

உண்ட மயக்கம்
உறக்கத்தில் போகும்
கொண்ட தயக்கம்
உணர்வில் சாகும்.

என்றும் உணர்வுகள்
ஒன்றாக
வாழ்க வளமுடன்…வாழ்க வளமுடன்…வாழ்க வளமுடன்…

————

இளைஞர் கலை விழா (Youth festivel)  சிறப்பாகவே நடை பெற்றது. இன்று தோழி கோல்டாவின் பிறந்த நாளும் கூட.

நட்புக்கு தலைவணங்கும்
பண்புக்கு தலைவணங்கும்
நட்பு மாறாத
நல்ல நண்பனின்

இனிய மனமார்ந்த இந்நாள்

என்றும் தொடர பிறந்தநாள்

நல்வாழ்த்துக்கள்

என்றும் நிறைவோடு இறைவன்
அருளோடு

வாழ்க வளமுடன் !

வாழ்க வளமுடன் !

வாழ்க வளமுடன் !

இந்நிகழ்ச்சி பற்றிய முழுமையான விளக்கம் காண :: இங்கே :: செல்லவும்.

இப்படிக்கு

இறக்கும் வேளை தேடி பிறக்கும் மானிடர்களில் ஒருவன்