வணக்கம் நண்பர்களே ,
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு _ இது எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் புகை பிடிக்கும் பொ_ _போக்குகள் புகை பிடிக்கத்தான் செய்கிறார்கள்…
சிகரெட்டை பிடித்துக்கொண்டு சாலையோர புகைபோக்கியாக மாறி விடாதீர்கள்…
புகையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை மறந்து வேண்டாம்.
நான் தான் சிகரெட் பிடிப்பது இல்லயே என்று இருப்பதால் மட்டும் நன்மை இல்லை. சிகரெட் பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது(சிகரெட்டை பற்ற வைத்ததில் இருந்து, அணைக்கும் வரையாவது).
உயிர்க்கு உயிரான இரு தீக்குச்சிகள் நண்பர்கள் ஒரு வீட்டில் சாம்பல் ஆகின்றனர். இருவரும் ஜோடியாக எமலோகம் செல்கின்றனர். அங்கே ஒரு குச்சி நரகத்திற்கும், ஒரு குச்சி சொர்க்கத்திற்கும் செல்கின்றது.
ஏன் ?
ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் ஒருநாள் உணவு அளித்தது.
ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள ஒருவனின் ஒருநாளை அழித்தது.
அந்த எமனுக்கு தெரியவில்லை, குச்சிகள் எரியப்படவே உருவாக்க படுபவை என்று.
ஒருநாள் தெரியவரும், மனிதர்கள் தான் எரிக்க பிறந்தவர்கள் என்று தன்னையும் பிறரையும்…
“சிகரெட்டை பிடிக்க வேண்டாம்” என்பதை வலியுறுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டு விருது வாங்கிய விளம்பரப்படம்…
[vimeo http://vimeo.com/23531917 w=400&h=300]
சிகரெட் மனிதனை என்ன செய்கிறது , பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
[vimeo http://vimeo.com/23532112 w=400&h=300]
நண்பர்களே நீங்கள் சிகரெட் பிடிப்பவர் என்றால் அதை மறந்துவிடுங்கள்.
இல்லையென்றால் மறக்கச் செய்யுங்கள்…