Author

Boobala Arun Kumaran R

I'm Just Like YOU...

July 14, 2010

இளைஞனின் லட்சியம்…

பூமாலை கூட
மாலை வருமுன் வாடிவிடும் ;
இச்சை மறந்து
உண்மை லட்சியம் கொண்ட நெஞ்சம்,
வாடுவதும் இல்லை !!
உதிர்வதும் இல்லை !!

வாழ்க்கை
வாழ்ந்து பார்க்கவே !
வீழ்ந்து
வானத்திலிருந்து பார்க்கவா ?

இல்லவே இல்லை…

விடியல் உனக்காக … சூரியனே எழுந்து வா…

July 7, 2010

Farewell Photo”s

உயிரில் கலந்த நட்பை

உலகம் நினைத்தாலும் பிரிக்க முடியாது…
உணர்வில் கலந்த நட்பை
உயிரே பிரிந்தாலும் மறக்க முடியாது…

சின்ன  ஞாபகமாக இருக்கட்டும் என்று ஒரு சிலர் மட்டும் எடுத்த பள்ளிக் கால நிழல்படங்கள்…

இடமிருந்து  வலமாக எல்லா நண்பர்களையும் அறிமுக படுத்துகிறேன்…

சயனைடு சண்முகநாதன், நிரூபன், நசீர், தவசிபால், ஜெகன் …

சங்கர் ,டல்ஹௌசி பிரபு, தவசிபால், பிரவீன் குமரன், சண்முகநாதன்…

இவங்க யாருன்னு உங்களுக்கே தெரியும்…

((ஐயா, இவுரு  தான் மாப்புள்ள.. ஆனா இவுரு போட்டுருகுற ட்ரஸ் என்னோடது இல்ல))…

விக்னேஷ்


 பழமை மாறாத பள்ளியின் பந்தம் ரத்தம் போன்றது ; இறப்பின் போதே இழக்க நேரிடும் …

June 24, 2010

கலியல் ஆட்டம் _ பாரம்பரிய நடனம்

தமிழ்நாடு  பல பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது…

மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மான் ஆட்டம், பாம்பு ஆட்டம், குறவன், குறத்தி ஆட்டம் என பல ஆட்டங்களில் கலியல் ஆட்டமும் ஒன்று…

அப்படிப்பட்ட கலியல் ஆட்டத்தை கல்லூரியில் விழாவில் போட்டிக்காக  நானும் என் நண்பர்களும் ஆடியதில் பெருமை கொள்கிறோம்…

[youtube=http://www.youtube.com/v/mcdWHadbX60]

பாடுபவர் :     ஜான் வில்லியம் ராஜ்.

இசை :             ரவி பாலன்.

நடன கலைஞர்கள்:

                           பூபால அருண் குமரன்.
                           இசக்கிமுத்து.
                           டல்ஹௌசி பிரபு.
                           பிரவீன் குமரன்.
                           சொர்ணவேல்.
                           சிவராம்.
                           சேர்ம ஆனந்த்.
                           ஜெகதீஸ்.

இந்த கலியல்ஆட்டத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது…

எங்களுக்கு இந்த ஆட்டத்தை சொல்லி தந்த குரு “உவரி”யை சேந்தவர்…

எப்படி இருக்கார் எங்க குரு?… சிங்கம்ல…

“””  கலை , மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா “””