“பில்லா 007 __ பேர கேட்டவுடனே அதிருதில்ல” அப்படின்னு சொல்லி பெரிய பில்டப் கொடுக்க ஒண்ணுமே இல்லங்க.
இரண்டாமாண்டு படிக்கும் போது(2008’ல்) அரங்கேற்றிய நாடகம் தான் இது.
நாடகத்தின் கதை , தலைப்பை பார்த்தே தெரிந்திருக்கும். அங்கு ஆயுத கடத்தல் என்றால் இங்கு பன், பிரெட் , ஜாம். . .
வசனங்கள், நடிப்பு தான் நாடகத்தில் நாடி.
அறிமுகம் :
இவன் தாங்க பில்லா. கதையோட கருப்பு நாயகன். இல்லையில்ல கதாநாயகன்.
இவங்க எல்லாரும் கொஞ்ச நேரம் மொக்கைய போட்டதுக்கு அப்புறம் ,
இதோ இந்த பன் சாப்பிடுகிறவரை பில்லா கொன்று விட திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. ( அடுத்து என்ன என்று நடிப்பவர்கள் உள்பட அனைவரும் குழம்ப )
ஒரு குத்து பாட்டு…
பாட்டு முடியவும் காவலர்களால் பில்லாவின் ஆட்டம் முடிந்தது.
பின்பு , புதிய பில்லா உதயமாகிறான்.
புதிய பில்லாவுக்கு ஜாம் வகைகளை பற்றி கற்றுத்தரும் DSP என்ன பண்றார்னு நீங்களே பாருங்க.( படத்த கிளிக் பண்ணி பாக்காதீங்க )
எல்லாவற்றையும் பில்லாவுக்கு கற்று கொடுத்துவிட்டு,
DSP : என்ன பில்லா , ஜாம் எல்லாம் புரிஞ்சுதா ?
Billa : எல்லாம் முடிஞ்சுது.
பல அரியர்களுக்கு பின் பயிற்சியில் தேறிய பில்லா இந்த டீக்கடையின் முன்பு தன் நினைவை இழந்த பில்லாவாக கடத்தல்காரர்களிடம் சேர்கிறான்.
(சத்தியமா இது டீ கடைதாங்க.அவர் டீ தாங்க ஆத்துறார்.)
இவ்வாறு நகரும் கதையில் ஒருநாள்,
வேவு பார்க்கும் பில்லா DSP’யிடம் பேசுவதை சக கடத்தல் மன்னன் டக்டீஸ் பார்த்து விட, பில்லாவுக்கு தெரியாமல் DSP’யை கடத்தி வைத்து துப்பாக்கிமுனையில் பில்லாவை மிரட்டுவார் டக்டீஸ்.
DSP : டேய் துப்பாக்கி குறி வைச்சிருகுற இடம் சரியில்ல.
கொஞ்ச நேர வசனத்துக்கு பிறகு நடக்கும் சண்டையில் கடத்தல் கும்பல் பிடிபடுகிறது.
சுபமாக சுபமடைந்தது நாடகம்…
நடிப்பு என்ற பெயரில் 20 நிமிடங்கள் கொடுமை படுத்தியவர்கள் :
பில்லா ஜான் வில்லியம் ராஜ்
பில்லாவின் தோழன் பூபால அருண் குமரன்
பில்லாவின் தோழி பிரவீன்
காவலர் டல்ஹோசி பிரபு
சக கடத்தல் மன்னன் இசக்கி முத்து
அடியாள் 1 கண்ணன்
அடியாள் 2 ரூபன்
அடியாள் 3 வைரவன்
பன் சாப்பிடுபவர் சுப்பையா கணேஷ்
காவலரை பிடித்து வைத்திருப்பவர் ரவி பாலன்
டீ கடை முதலாளி விஜய குமார்
மேலும் சில காட்சிகளின் நிழல்ப்படங்கள் :
நன்றி…
Leave a Reply